இந்திய தயாரிப்பு ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிக்கு 4 நட்சத்திர அந்தஸ்து

By Saravana

இந்திய தயாரிப்பு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி என்சிஏபி(NCAP) கிராஷ் டெஸ்ட்டில் 4 நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளது. உலகின் சில முக்கிய மார்க்கெட்டுகளில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் எஸ்யூவியாக தற்போது ஈக்கோஸ்போர்ட் வலம் வருகிறது.

இந்த நிலையில், புதிய கார்களின் பாதுகாப்பை தர சோதனை நடத்தி நட்சத்திர அந்தஸ்து வழங்கி வரும் ஐரோப்பாவை சேர்ந்த என்சிஏபி அமைப்பு தற்போது ஈக்கோஸ்போர்ட்டின் சர்வ வல்லமைகளையும் சோதித்து பார்த்துள்ளது. இதனடிப்படையில், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிக்கு 4 நட்சத்திர அஸ்தஸ்து வழங்கியுள்ளது.

 ஏமாற்றம்

ஏமாற்றம்

அதிகபட்சம் 5 புள்ளிகளில் 4 நட்சத்திர அந்தஸ்தை ஈக்கோஸ்போர்ட் பெற்றுள்ளது ஏமாற்றம் அளிப்பதாக ஆட்டோமொபைல் துறையினர் கருத்து தெரிவிக்கின்றனர். இருப்பினும், 4 நட்சத்திர அந்தஸ்து என்பதை குறைவாக கருத முடியாது என ஃபோர்டு வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

வேரியண்ட்

வேரியண்ட்

இந்தியாவில் தயாரித்து அனுப்பப்பட்ட ஐரோப்பிய மாடல் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் டைட்டானியம் வேரியண்ட் கிராஷ் டெஸ்ட் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

கேபின் பாதுகாப்பு

கேபின் பாதுகாப்பு

முன்பக்கத்தை மோதி நடத்தப்பட்ட சோதனையில் கேபினில் அதிக பாதிப்புகள் ஏற்படவில்லை என்பது சந்தோஷமான விஷயம். பக்கவாட்டில் மோதல் நிகழ்த்தி பார்க்கப்பட்டதிலும் கேபினிலும், பயணிகளுக்கும் அதிக பாதிப்புகள் ஏற்படவில்லை என்பதும் கண்டறியப்பட்டது.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

சோதனைக்கு உட்படுத்தப்பட்ட வேரியண்ட்டில் டிரைவர், சக பயணி மற்றும் பக்கவாட்டு மற்றும் தலைப் பகுதி ஏர்பேக்குகள் பொருத்தப்பட்டு இருந்தன. எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் மற்றும் சீட் பெல்ட் எச்சரிக்கை வசதி, முன்புற இருக்கைகளில் சீட் பெல்ட் உள்ளிட்டவை இருந்தன.

தர அந்தஸ்து

தர அந்தஸ்து

மோதலின்போது பயணிகளுக்கான பாதிப்புகள் ஏற்படுவதை கணக்கில் கொண்டு பார்க்கப்பட்டதில், பெரியவர்களுக்கு சிறப்பான பாதுகாப்பை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு 93 சதவீதம் சிறப்பான பாதுகாப்பை வழங்குவதாகவும், குழந்தைகளுக்கும் 77 சதவீதம் சிறப்பான பாதுகாப்பை வழங்குவதாகவும், பாதசாரிகளுக்கு பாதுகாப்பில் 59 சதவீதம் மட்டுமே சிறப்பாக இருக்கிறது.

இதெல்லாம் வேஸ்ட்டா?

இதெல்லாம் வேஸ்ட்டா?

ஏராளமான பாதுகாப்பு வசதிகள் கொண்டிருந்தாலும் அவற்றின் மூலம் 53 சதவீதம் மட்டுமே சிறப்பான பாதுகாப்பை பெற முடிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய மாடல் ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரொகிராம் நிரந்தர அம்சமாக இடம்பெற்றுள்ளது. ஆனால், இந்தியாவில் ஈக்கோஸ்போர்ட் ஆட்டோமேட்டிக் மாடலில் மட்டுமே இந்த பாதுகாப்பு வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பின்புற பயணிகள்

பின்புற பயணிகள்

பின்புற பயணிகளுக்கு சீட் பெல்ட் கொடுக்கப்படவில்லை. இருப்பினும், பின்புற பயணிகளுக்கு மோதலின்போது கழுத்துப் பகுதி அதிக பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில் பயணிகளுக்கான பாதுகாப்பு வழங்குவதில் அதிக புள்ளிகளை ஈக்கோஸ்போர்ட் பெற்றுள்ளது.

கிராஷ் டெஸ்ட் வீடியோ

என்சிஏபி அமைப்பு நடத்திய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் கிராஷ் டெஸ்ட் சோதனையின் வீடியோவை காணலாம்.

Most Read Articles
English summary
Euro NCAP (New Car Assessment Program), the European organization that tests preventive safety features and crashworthiness of new vehicles has released its results for the new Ford EcoSport. The India built compact SUV has scored 4 stars out of 5.
Story first published: Thursday, November 28, 2013, 12:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X