ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் முக்கிய தகவல்கள் கசிந்தது!

அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ஈக்கோஸ்போர்ட் மினி எஸ்யூவியை விற்பனைக்கு கொண்டு வருவதை ஃபோர்டு தொடர்ந்து தாமதப்படுத்தி வருகிறது. மேலும், ஈக்கோஸ்போர்ட்டை விற்பனைக்கு கொண்டு வருவது பற்றியும் இதுவரை ஃபோர்டு எந்த விபரத்தையும் வெளியிடவில்லை. இதனால், வாடிக்கையாளர் மத்தியில் ஈக்கோஸ்போர்ட் மீதான ஈர்ப்பு குறைந்து வருகிறது.

இந்த நிலையில், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மினி எஸ்யூவி பற்றிய சில முக்கிய தகவல்கள் இணையதளங்களில் கசிந்துள்ளன. அடுத்த மாதம் விற்பனைக்கு வந்துவிடும் என்று தகவல்கள் கூறிவரும் நிலையில், ஈக்கோஸ்போர்ட் பற்றிய தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

எஞ்சின்

எஞ்சின்

ஈக்கோஸ்போர்ட் 3 விதமான எஞ்சின்களுடன் விற்பனைக்கு வர இருக்கிறது. 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் எஞ்சினுடன் விற்பனைக்கு கிடைக்கும். இதில், 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் எஞ்சின் டாப் வேரியண்ட்டில் மட்டுமே வர இருக்கிறது.

4 வேரியண்ட்கள்

4 வேரியண்ட்கள்

ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி ஆம்பியன்ட், டிரென்ட், டைட்டானியம் மற்றும் டைட்டானியம் ப்ளஸ் ஆகிய 4 வேரியண்ட்களில் விற்பனைக்கு வர இருக்கிறது.

ஆம்பியன்ட்

ஆம்பியன்ட்

இது ஈக்கோஸ்போர்ட்டின் பேஸ் வேரியண்ட்டாக இருக்கும். இருப்பினும், டெலிஸ்கோப்பிக் ஸ்டீயரிங், எலக்ட்ரிக் அட்ஜெஸ்ட் ரியர் வியூ மிரர், புளூடூத் வசதியுடன் மியூசிக் பிளேயர், ரிமோட் லாக்கிங், டச் ஸ்கீரின், 15 இஞ்ச் வீல்கள் ஆகியவை காருடன் கிடைக்கும் அம்சங்களாக இருக்கும்.

டிரென்ட்

டிரென்ட்

ஏபிஎஸ், பவர் விண்டோஸ், டிரைவர் சீட் அட்ஜெஸ்ட், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் நிரந்தரமான அம்சங்களாக இருக்கும்.

டைட்டானியம்

டைட்டானியம்

டைட்டானியம் வேரியண்ட்டில் ஸ்டீயரிங் வீலுக்கு லெதர் உறை, ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், கூல்டு கிளவ் பாக்ஸ், ரூஃப் ரெயில்ஸ், பனி விளக்குகள், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், டூயல் ஏர்பேக்குகள், 16 இஞ்ச் அலாய் வீல் ஆகியவை பிற வேரியண்ட்களை விட கூடுதல் அம்சங்களாக இருக்கும்.

டைட்டானியம் ப்ளஸ்

டைட்டானியம் ப்ளஸ்

புஷ் பட்டன் ஸ்டார்ட், லெதர் இருக்கைகள், கீ லெஸ் என்ட்ரி, கூடுதல் ஏர்பேக்குகளை ஆப்ஷனலாக பெறலாம்.

டிரான்ஸ்மிஷன்

டிரான்ஸ்மிஷன்

1.5 லிட்டர் எஞ்சின் கொண்ட பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களின் ஆம்பியன்ட் மற்றும் டிரென்ட் வேரியண்ட்கள் மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டதாக இருக்கும். டைட்டானியம் வேரியண்ட்டில் 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் எஞ்சினுடன் கிடைக்கும். மேலும், ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் பெற்றுக் கொள்ளலாம். மேலும், டீசல் மாடலில் டைட்டானியம் வேரியண்ட் கிடைக்காது.

Most Read Articles
English summary
The Leading automobile website has now leaked the EcoSport will be offered in four variants - Ambiente, Trend, Titanium and Titanium Optional. Engines provided will be three - a 1.5 liter petrol, a 1.5 liter diesel and the highly anticipated 1.0 liter turbocharged Ford EcoBoost engine.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X