டீசல், எலக்ட்ரிக் மஸ்டாங் மாடல்களை அறிமுகப்படுத்த ஃபோர்டு திட்டம்!

50 ஆண்டுகளை நிறைவு செய்து விரைவில் புதிய மாடலுடன் பொன்விழா கொண்டாட ஃபோர்டு மஸ்டாங் தயாராகி வருகிறது. இந்த வேளையில், டீசல், ஹைபிரிட் மற்றும் எலக்ட்ரிக் மஸ்டாங் மாடல்களை அறிமுகம் செய்ய ஃபோர்டு திட்டமிட்டுள்ளது.

மஸில் கார் ரகத்தை சேர்ந்த மஸ்டாங்கிடமிருந்து எரிபொருள் சிக்கனத்தை எதிர்பார்க்க இயலாது. வரும் காலங்களில் அமல்படுத்த இருக்கும் மாசுக்கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டு புதிய மஸ்டாங் கார்களை தொடர்ந்து தயாரிக்க வேண்டுமெனில் பெட்ரோல் தவிர புதிய எரிபொருள் தொழில்நுட்பம் கொண்ட மாடல்களை அறிமுகம் செய்வது தவிர்க்க இயலாதது.

ஹைபிரிட், எலக்ட்ரிக் மாடல்கள் மூலமாகத்தான் புதிய மாசுக்கட்டுப்பாட்டு விதிகளுக்கு இணங்க இதுபோன்ற கார்களை தயாரிக்க முடியும். இதை உணர்ந்து ஃபோர்டு நிறுவனம் மஸ்டாங்கின் புதிய எரிபொருள் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

தகவல்

தகவல்

வரும் ஏப்ரல் மாதம் 14ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கும் 2015 ஃபோர்டு மஸ்டாங் காரை வரும் காலங்களில் பெட்ரோல் தவிர்த்து புதிய எரிபொருள் மாடல்களிலும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக ஃபோர்டு எஞ்சின் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் பாப் ஃபேசட்டி தெரிவித்துள்ளார்.

அவசியம்

அவசியம்

அமெரிக்காவை தவிர்த்து முதல்முறையாக ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆஸ்திரேலிய கண்டங்களில் புதிய மஸ்டாங் விற்பனைக்கு செல்ல இருக்கிறது. விற்பனைக்கு கொண்டு செல்லப்பட இருக்கும் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் பெட்ரோலைவிட டீசல் விலை குறைவானதாகவும், சில மார்க்கெட்டுகளில் ஹைபிரிட் கார்களுக்கு அதிக மவுசும் இருக்கிறது. இதனை மனதில் கொண்ட ஃபோர்டு புதிய எரிபொருள் நுட்பம் கொண்ட மஸ்டாங் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், வெகு எளிதாக மார்க்கெட்டை பிடித்துவிட முடியும் என்பது திட்டம்.

டீசல் மாடல்

டீசல் மாடல்

டீசல் மாடலை உடனடியாக அறிமுகம் செய்வது குறித்து கைவசம் இப்போது திட்டம் இல்லை எனவும், ஒருவேளை டீசல் மாடல் தேவைப்படும் அவசியம் ஏற்படும்போது நிச்சயமாக அதுகுறித்து பரிசீலிப்போம் என்று பாப் பேசட்டி தெரிவித்தார். அதேவேளை, ஹைபிரிட், எலக்ட்ரிக் மாடல்களை அறிமுகம் செய்யும் திட்டம் இருப்பதாக கூறினார்.

 மாசுக்கட்டுப்பாடு அம்சம்

மாசுக்கட்டுப்பாடு அம்சம்

5.0 லிட்டர் வி8 எஞ்சின் உட்பட தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் மூன்று பெட்ரோல் எஞ்சின்களும் தற்போதைய மாசுக்கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டதாக மேம்படுத்தியுள்ளோம். அதேவேளை, ஹைபிரிட், எலக்ட்ரிக் மாடல்களும் எதிர்காலத்தில் தவிர்க்க முடியாத ஒன்று என்று அவர் தெரிவித்தார்.

 விபரம் இல்லை

விபரம் இல்லை

புதிய மஸ்டாங் காரில் பொருத்தப்பட்டிருக்கும் எஞ்சின்களின் மாசுக்கட்டுப்பாட்டு திறன் குறித்த விபரங்களை ஃபோர்டு இதுவரை வெளியிடவில்லை. இருப்பினும், முந்தைய மாடல்களைவிட அதிக எரிபொருள் சிக்கனம் மற்றும் குறைந்த கார்பன் புகை வெளியிடும் தன்மை கொண்டதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

 இந்தியா வருகிறது?

இந்தியா வருகிறது?

அடுத்த 2 ஆண்டுகளில் புதிய மஸ்டாங் காரை இந்தியாவிலும் ஃபோர்டு விற்பனைக்கு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆட்டோமொபைல் பிரியர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் கச்சிதமான பெர்ஃபார்மென்ஸ் காராக இருக்கும்.

Most Read Articles
English summary
Bob Fascetti, Ford's global powertrain head has revealed that the 2015 Mustang could be powered by engines running other than petrol. Some hard core Mustang drivers may equal this to sacrilege, but its certainly not surprising.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X