1.66 லட்சம் ஃபிகோ, கிளாசிக் கார்களை திரும்ப அழைக்கும் ஃபோர்டு

By Saravana

ஆபத்தை விளைவிக்கும் என கண்டறியப்பட்டுள்ள பிரச்னைகளை சரி செய்து தரும் விதமாக 1.66 லட்சம் ஃபிகோ மற்றும் கிளாசிக் கார்களை திரும்ப அழைக்க இருப்பதாக ஃபோர்டு அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் 1.25 லட்சம் ஃபிகோ மற்றும் கிளாசிக் செடான் கார்களுக்கு ஃபோர்டு ரீகால் அறிவிப்பு வெளியிட்டது. பின்புற சஸ்பென்ஷன் அமைப்பில் இருக்கும் ரியர் ட்விஸ்ட் பீமில் தெறிப்பு ஏற்படும் வாய்ப்பு இருப்பதையும், பவர் ஸ்டீயரிங் ஹோஸ் குழாயில் இருக்கும் பிரச்னையை சரி செய்து தருவதற்கும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 2011ம் ஆண்டு ஜனவரி முதல் 2012 ஜூன் வரை தயாரிக்கப்பட்ட ஃபிகோ மற்றும் கிளாசிக் கார்களிலும் இந்த பிரச்னைகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தற்போது கூடுதல் ஃபிகோ, கிளாசிக் கார்களையும் ஃபோர்டு திரும்ப அழைக்கிறது.

Classic Car

சஸ்பென்ஷன் பிரச்னையை சரி செய்வதற்காக 1,09,469 ஃபிகோ கார்களையும், 22,453 கிளாசிக் கார்களையும் ஃபோர்டு அழைக்க உள்ளது. இதுதவிர, பவர் ஸ்டீயரிங் ஹோஸ் குழாய் பிரச்னையை சரி செய்வதற்காக 30, 681 ஃபிகோ கார்களும், 3,418 கிளாசிக் கார்களும் ஆக மொத்தம் 1.66 லட்சம் கார்கள் திரும்ப அழைக்கப்பட உள்ளன.

பிரச்னை இருக்கும் கார்களில் புதிய பாகங்கள் இலவசமாக மாற்றித் தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெனரல் மோட்டார்சை தொடர்ந்து ஃபோர்டு நிறுவனமும் அதிக அளவிலான கார்களை திரும்ப அழைப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
In what is one of the largest ever recall in Indian automobile history, Ford India has issued a recall of 1,66,000 Figo hatchback and Classic sedan units (previously, Fiesta). What's interesting is, this recall is an extension of the previous recall which involved 1,25,000 cars.
Story first published: Saturday, September 14, 2013, 15:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X