டீசல் ஈக்கோஸ்போர்ட் கார்களுக்கு ரீகால்: ஃபோர்டு அறிவிப்பு

விற்பனைக்கு வந்து 2 வாரங்களே ஆன நிலையில், 972 ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி கார்களை திரும்ப அழைக்க இருப்பதாக ஃபோர்டு அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பெரும் தாமதங்களுக்கு பிறகு கடந்த மாதம் 26ந் தேதி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

Ford Ecosport

மேலும், ஏராளமான சாலை சோதனைகள் மற்றும் பிற சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில், கடந்த 2 வாரங்களில் டெலிவிரி கொடுக்கப்பட்ட 972 டீசல் மாடல் ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி கார்களை திரும்ப அழைக்க உள்ளதாக ஃபோர்டு அறிவித்துள்ளது.

எஞ்சினை ஸ்டார்ட் செய்ய உதவும் க்ளோ ப்ளக் தற்போது பொருத்தப்பட்டிருக்கும் இடம், தீப்பிடிக்கும் ஆபத்து இருக்கிறது. எனவே, க்ளோ ப்ளக் இடத்தை மாற்றுவதற்காக இந்த அறிவிப்பை ஃபோர்டு வெளியிட்டுள்ளது. வாடிக்கையாளர் நலன் கருதி ஈக்கோஸ்போர்ட் கார்களை திரும்ப பெற இருப்பதாக ஃபோர்டு அறிவித்துள்ளது.

Most Read Articles
English summary
American car maker Ford Recalls 972 Diesel Ecosport suvs in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X