பெட்ரோல், டீசலை கபளீகரம் செய்யும் தலைவர்களின் கார்கள்!

கச்சா எண்ணெய் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுவதும், அதற்கு ரூபாய்க்கு பதிலாக டாலராக கொடுப்பதுமே ரூபாய் மதிப்புக்கு காரணமாக கூறி, அதன் பயன்பாட்டை மக்கள் குறைக்க வேண்டும் என்று அமைச்சர்கள், தலைவர்கள் அறிக்கை விட்டு வருகின்றனர். கடந்த மாதம் 30ந் தேதி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மன்மோகன்சிங் பொருளாதாரத்தை சீர்தூக்கி நிறுத்த சில கடினமான சூழ்நிலைகளை மக்கள் எதிர்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

அதேசமயம், இந்த அறிக்கை விடும் தலைவர்களின் பின்னால் அணி வகுக்கும் கார்களை பார்த்தால் தலைசுற்ற வைக்கிறது. தலைவர்களின் பாதுகாப்பு மிக முக்கியம் என்றாலும், தேவையைவிட தேவையில்லாமல் அவர்களுக்கு பின்னால் அணிவகுக்கும் கார்களின் எண்ணிக்கை அதிகம் இருக்கிறது. பீகாரில் நடந்தே அலுவலகம் செல்லும் கலெக்டர் பற்றிய செய்தியை சமீபத்தில் பார்த்தோம்.

ஆனால், இதுபோன்ற அதிகாரிகள், அமைச்சர்களின் எண்ணிக்கை அத்தி பூத்த கதையாகத்தான் இருக்கிறது. உண்மையில், நாட்டின் முக்கிய தலைவர்கள் பயன்படுத்தும் கார்களின் எண்ணிக்கையும், அதற்கான எரிபொருள் மற்றும் பராமரிப்புக்கு கோடி கோடியாக அரசு செலவிடும் தொகையும் மிரள வைக்கிறது. நாட்டின் முக்கிய தலைவர்கள் பயன்படுத்தும் கார்களின் விபரங்களை ஸ்லைடரில் வழங்கியுள்ளோம்.

 பிரதமர் மன்மோகன்சிங்

பிரதமர் மன்மோகன்சிங்

கடந்த மே மாதம் தாக்கல் செய்த சொத்து மதிப்பில் ரூ.21,000 மதிப்புடைய மாருதி 800 கார் மட்டுமே தன்னிடம் இருப்பதாக பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்திருந்தார். ஆனால்...

 பிரதமருக்கான கார்கள்

பிரதமருக்கான கார்கள்

பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு அரசாங்கம் சார்பாக மொத்தம் 10 கார்கள் வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு வசதிகளுடன் கஸ்டமைஸ் செய்யப்பட்ட 2 பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் செடான் கார்கள், 6 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 டீசல் எஸ்யூவி கார்கள் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஆம்புலன்ஸ் ஆகியவை அவருக்காக வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர, மத்திய மற்றும் மாநில அரசின் பாதுகாப்பு போலீசாரின் வாகனங்கள் தனிக் கணக்கு. இதில், மொபைல்போன் ஜாமர் பொருத்தப்பட்ட டாடா சஃபாரி, மாருதி ஜிப்ஸி உள்ளிட்டவை அடங்கும். இதில், பிரதமருக்கான சொகுசு கார்கள் லிட்டருக்கு 4 கிமீ முதல் 5 கிமீ வரை மட்டுமே மைலேஜ் தரும் என்பது குறிப்பிடத்தக்கது.

 எல்.கே.அத்வானி

எல்.கே.அத்வானி

பாஜக.,வின் மூத்த தலைவர் அத்வானி 6 கார்களை பயன்படுத்துகிறார். இதில், புல்லட் புரூப் அம்பாசடர் மற்றும் மொபைல்போன் ஜாமர் பொருத்தப்பட்ட டாடா சஃபாரியும் அடங்கும்.

 சோனியா காந்தி

சோனியா காந்தி

மற்றவர்களை ஒப்பிடுகையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி குறைவான கார்களையே பயன்படுத்துகிறார். தவிர, டாடா சஃபாரியில்தான் பெரும்பாலும் பயணம் மேற்கொள்கிறார். மொத்தம் 3 கார்களை பயன்படுத்துகிறார். இதில், மொபைல்போன் ஜாமர் பொருத்தப்பட்ட டாடா சஃபாரியும் அடக்கம். சமீபத்தில் ரேஞ்ச்ரோவர் எஸ்யூவியும் சோனியா காந்தி கேரேஜில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 பிரணாப் முகர்ஜி

பிரணாப் முகர்ஜி

குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அரசாங்கம் வழங்கிய பென்ஸ் லிமோசின் கார் உள்ளது. இதுதவிர, பாதுகாவலர்கள், அதிகாரிகள் ஆகியோர் கார்களில் அணி வகுக்கின்றனர்.

 ராகுல் காந்தி

ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெரும்பாலும் டாடா சஃபாரியில் செல்வதை விரும்புகிறார். டெல்லியில் செல்லும்போது மூன்று சஃபாரி கார்களை பயன்படுத்துகிறார். உத்தர பிரதேசத்திற்கு செல்லும்போது டொாயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவிக்கு மாறிவிடுகிறார்.

 பஞ்சாப் முதல்வர்

பஞ்சாப் முதல்வர்

பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மற்றும் ஹரியானா முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா ஆகியோர் அணிவகுப்பு பிரியர்கள். பாதல் மற்றும் அவரது மகனும் துணை முதல்வருமான சுக்பீர் சிங் ஆகியோர் மொத்தம் 51 கார்களை பயன்படுத்துகின்றனர். பாதல் டொயோட்டா லேண்ட் குரூஸர் எஸ்யூவியை பயன்படுத்துகிறார். பஞ்சாப் அரசு தற்போது மிகப்பெரிய நிதி நெருக்கடியில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், தீவிரவாதிகளிடமிருந்து முதல்வருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக வெளியான தகவலையடுத்து, நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய சொகுசு செடான் கார்களை வாங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 ஹரியானா முதல்வர்

ஹரியானா முதல்வர்

ஹரியானா முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா ஃபோர்டு என்டெவர் எஸ்யூவியை பயன்படுத்துகிறார். இதுதவிர, மொத்தம் அவருடன் 25 கார்கள் அணிவகுக்கும்.

காஷ்மீர் முதல்வர்

காஷ்மீர் முதல்வர்

காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா ரேஞ்ச்ரோவர் மற்றும் ஸ்கார்ப்பியோ எஸ்யூவி கார்களை பயன்படுத்துகிறார். மொத்தம் 10 முதல் 25 கார்கள் வரை அணிவகுக்கும்.

 உ.பி முதல்வர்

உ.பி முதல்வர்

உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆகியோரும் அதிக அளவில் கார்களை பயன்படுத்தும் முதல்வர்களாக தெரிவிக்கப்படுகிறது.

மராட்டிய முதல்வர்

மராட்டிய முதல்வர்

மஹாராஷ்டிர முதல்வர் பிரித்திவி ராஜ் சவான் டாடா சஃபாரி மற்றும் ஸ்கார்ப்பியோ கார்களை பயன்படுத்துகிறார். தீவிரவாத அச்சுறுத்தல் மிகுந்திருப்பதால் அதிக பாதுகாப்பு வளையத்துடன் செல்கிறார். மொத்தம் 6 கார்கள் அணிவகுக்கின்றன.

குஜராஜ் முதல்வர்

குஜராஜ் முதல்வர்

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குண்டு துளைக்காத ஸ்கார்ப்பியோ எஸ்யூவியை பயன்படுத்துகிறார். இவரது பாதுகாப்புக்காக 10 முதல் 12 கார்கள் உடன் செல்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை ஸ்கார்ப்பியோ எஸ்யூவிகள்தான்.

ம.பி.முதல்வர்

ம.பி.முதல்வர்

மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் செவர்லே கேப்டிவா எஸ்யூவியை பயன்படுத்துகிறார். மாருதி ஜிப்ஸி பைலட் காராக இருக்கிறது. இதுதவிர, 4 அம்பாசடர்கள் அணிவகுக்கும்.

மேற்குவங்க முதல்வர்

மேற்குவங்க முதல்வர்

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதவியேற்ற சில மாதங்களில் தேவையில்லாமல் பின்னால் வரும் கார்களை வேண்டாம் என்று அதிரடியாக கூறிவிட்டார். இருப்பினும், பாதுகாப்பு காரணங்களை காட்டி 5 கார்கள் அவருடன் செல்கின்றனர். அவர் ஸ்கார்ப்பியோவை பயன்படுத்துகிறார்.

 பீகார் முதல்வர்

பீகார் முதல்வர்

பீகார் முதல்வர் அம்பாசடர் காரில்தான் பயணம் மேற்கொள்கிறார். ஆனால், அவருக்கு பின்னால் அதிக எண்ணிக்கையில் எஸ்யூவி கார்கள் அணிவகுக்கின்றன. மொத்தம் 12 கார்களை அவர் பயன்படுத்துகிறார்.

தமிழக முதல்வர்

தமிழக முதல்வர்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் எல்சி200 எஸ்யூவியை பயன்படுத்துகிறார். அதிகாரிகள், பாதுகாவலர்கள் உள்ளிட்டோருக்காக டாடா சுமோ, டாடா சஃபாரி, டொயோட்டா இன்னோவா மற்றும் டெம்போ டிராவலர் ஆம்புலன்ஸ் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.

 இது சாம்பிள்தான்...

இது சாம்பிள்தான்...

நாட்டின் முக்கிய தலைவர்களை மட்டுமே பட்டியலில் கொடுத்துள்ளோம். இதுவே தலைசுற்ற வைக்கிறது. இந்த நிலையில், அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பயன்படுத்தும் கார்களின் எண்ணிக்கையும், எரிபொருள் செலவுக்கான கணக்கையும் எடுத்தால் மவுனமே பதிலாகிறது. அறிக்கை விடும் முன்பாக தலைவர்கள் தங்களது பின்னால் வரும் தேவையற்ற கார்களின் எண்ணிக்கையை குறைத்தால் அது நிச்சயம் மிகச் சிறந்த முன்மாதிரியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

Most Read Articles
English summary
Petroleum Minister Veerappa Moily has asked for petrol pumps to be shut post 8PM. The logic being wastage of fuel by consumers. But is this practical? Could this actually start illegal petrol trade? Most of all, does this hypocritic decision take into account excessive fuel use by MPs?
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X