டாடா மோட்டார்ஸ் எழுச்சி பெறுமா அல்லது வீழ்ச்சி பெறுமா? - ஜோசியம்!!

By Saravana

அடுத்த 5 ஆண்டுகளில் கார் நிறுவனங்களின் வளர்ச்சி எப்படியிருக்கும் என்பது குறித்து கேஎம்பிஜி அமைப்பு ஓர் ஆய்வை மேற்கொண்டது. 14வது ஆண்டாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் கார் நிறுவனங்கள், சப்ளையர்கள், வாகன கடன் வழங்கும் நிறுவனங்கள், வாடகை கார் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் பங்கேற்று தங்களது கருத்து தெரிவித்தனர்.

இப்போது இருக்கும் நிலையிலிருந்து 2018ல் எந்த நிறுவனம் எழுச்சி பெறும் அல்லது வீழ்ச்சி பெறும் என்பதன் அடிப்படையிலான இந்த ஆய்வில் ஆசியாவை சேர்ந்த பல முன்னணி நிறுவனங்கள் புதிதாக பட்டியலுக்குள் வந்துள்ளன. இந்த கார் நிறுவனம் நிச்சயம் எழுச்சி பெறும் என்ற அதிக நம்பிக்கையுடன் கருத்து தெரிவித்த நிறுவனங்களில் ஃபோக்ஸ்வேகன் குழுமம் முதலிடம் பெற்றுள்ளது. டாடா மோட்டார்ஸ், ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் ஆகியவை பட்டியலின் கடைசியில் நிற்கின்றன.

ஃபோக்ஸ்வேகன்

ஃபோக்ஸ்வேகன்

ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் பங்களிப்பு அதிகரிக்கும் என 81 சதவீத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். வெறும் 3 சதவீதத்தினர் மட்டுமே குறையும் என கணித்துள்ளனர். மொத்ததில் ஆய்வில் பங்குகொண்டவர்கள் வளர்ச்சி பெறுவதில் அதிக உறுதியாக கருத்து தெரிவித்ததில் ஃபோக்ஸ்வேகன் முதலிடத்தில் உள்ளது.

 பிஎம்டபிள்யூ

பிஎம்டபிள்யூ

ஆடி, பென்ஸ் நிறுவனத்திடமிருந்து கடும் போட்டியை எதிர்கொண்டு வரும் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் மார்க்கெட் பங்களிப்பு அதிகரிக்கும் என 70 சதவீதத்தினரும், குறையும் என 5 சதவீத்தினரும் தெரிவித்துள்ளனர்.

பெயிக்

பெயிக்

பீஜிங் ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தின் மார்க்கெட் பங்களிப்பு அதிகரிக்கும் என 70 சதவீத்தினரும், குறையும் என 5 சதவீத்தினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

டொயோட்டா

டொயோட்டா

டொயோட்டாவின் மார்க்கெட் பங்களிப்பு அதிகரிக்கும் என 68 சதவீதத்தினர் கூறியுள்ளனர். குறையும் என 7 சதவீதத்தினர் கணித்துள்ளனர்.

கியா மோட்டார்ஸ்

கியா மோட்டார்ஸ்

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அங்கமான கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மார்க்கெட் பங்களிப்பு அதிகரிக்கும் என 61 சதவீதத்தினரும், குறையும் என 14 சதவீதத்தினரும் கூறியுள்ளனர்.

ஹூண்டாய்

ஹூண்டாய்

அடுத்த 5 ஆண்டுகளில் ஹூண்டாய் மார்க்கெட் பங்களிப்பு அதிகரிக்கும் என 61 சதவீத்தினர் கூறினர். அதேவேளை, மார்க்கெட் பங்களிப்பு குறையும் என 14 சதவீத்தினர் ஆருடம் கூறியுள்ளனர்.

செயிக் மோட்டார்

செயிக் மோட்டார்

சீனாவின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான செயிக் மோட்டார் நிறுவனத்தின் மார்க்கெட் பங்களிப்பு அதிகரிக்கும் என 61 சதவீதத்தினரும், வீழ்ந்து விடும் என்று 10 சதவீதத்தினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

 எஃப்ஏடபிள்யூ

எஃப்ஏடபிள்யூ

சீனாவை சேர்ந்த பழமையான வாகன தயாரிப்பு நிறுவனமா எஃப்ஏடபிள்யூ நிறுவனத்தின் மார்க்கெட் பங்களிப்பு அதிகரிக்கும் என 53 சதவீதத்தினரும், 9 சதவீதத்தினர் குறையும் என்றும் தெரிவித்துளளனர். இந்த நிறுவனம் ஃபோக்ஸ்வேகனின் கூட்டு நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

 கீலி ஆட்டோமொபைல்ஸ்

கீலி ஆட்டோமொபைல்ஸ்

ஆய்வில் பங்கேற்றவர்களில் 51 சதவீதத்தினர் சீனாவை சேர்ந்த கீலி ஆட்டோமோட்டிவ் நிறுவனம் மார்க்கெட் பங்களிப்பு அதிகரிக்கும் என்றும் 11 சதவீதத்தினர் குறையும் என்றும் தெரிவித்தனர்.

நிசான்

நிசான்

ஆய்வில் கலந்து கொண்ட 50 சதவீதத்தினர் ஜப்பானிய கார் நிறுவனமான நிசானின் மார்க்கெட் பங்களிப்பு அதிகரிக்கும் என்றும், 14 சதவீதத்தினர் குறையும் என்றும் கருத்து தெரிவித்தனர்.

டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ் மார்க்கெட் பங்களிப்பு அதிகரிக்கும் என 50 சதவீதத்தினரும், குறையும் என 20 சதவீதத்தினரும் தெரிவித்துள்ளனர்.

 ஃபோர்டு மற்றும் ஜிஎம்

ஃபோர்டு மற்றும் ஜிஎம்

அமெரிக்காவின் வாகன உற்பத்தி மையமாக திகழும் டெட்ராய்ட் நகரை சேர்ந்த ஃபோர்டு மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனங்களின் மார்க்கெட் பங்களிப்பு அதிகரிக்கும் என 44 சதவீதத்தினரும், குறையும் என 23 சதவீதத்தினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

கணிப்பு சரியாகுமா?

கணிப்பு சரியாகுமா?

இந்த கணிப்பு சரியானதுதானா என்பதை அறிந்து கொள்ள இன்னும் 5 ஆண்டுகள் காத்துக்கிடக்கணும். இந்த ஆய்வை விடுங்க. அடுத்த 5 ஆண்டுகளில் டாடா மோட்டார்ஸ் மார்க்கெட் பங்களிப்பு அதிகரிக்குமா? - நீங்க சொல்லுங்க.

Most Read Articles
English summary
What companies do the world's auto executives think will increase their market share from now until 2018? KMPG's 14th Annual Automotive Executive Survey, published in April, gives the auto industry a sense of who will lead and who will fall behind. 
Story first published: Wednesday, October 23, 2013, 14:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X