தவேரா ரீகால் பிரச்னையால் ஜிஎம்.,க்கு ரூ.500 கோடி இழப்பு

Chevy Tavera
தவேராவின் பிரச்னையை சரிசெய்து தருவதற்காக திரும்ப அழைத்ததால், ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு ரூ.500 கோடி வரை இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மாசு தரக்கட்டுப்பாட்டு பிரச்னையால் கடந்த 2005ம் ஆண்டு முதல் இதுவரை விற்பனை செய்யப்பட்ட 1.14 லட்சம் தவேரா கார்களை ஜெனரல் மோட்டார்ஸ் திரும்ப அழைத்துள்ளது.

இதுதவிர, அராய் வசம் கொடுக்கப்பட்ட தவேரா கார்களின் எடை விபரத்திற்கும், விற்பனை செய்யப்பட்ட கார்களுக்கும் எடைக்கும் வித்தியாசம் இருந்துள்ளது.

இதனால், இதுவரை விற்பனை செய்யப்பட்ட அனைத்து கார்களையும் ஜெனரல் மோட்டார்ஸ் திரும்ப அழைத்துள்ளது.

இந்த நிலையில், தவேராவை திரும்ப அழைத்து பிரச்னையை சரி செய்து தருவதற்காக ரூ.285 கோடியை ஜெனரல் மோட்டார்ஸ் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதவிர, விதிகளை மீறியதற்காக மோட்டார் வாகனச் சட்டத்தின்படி பெரிய அளவிலான அபாரதத்தை அந்த நிறுவனம் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆலைகள் அமைந்துள்ள மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநில அரசுகளை நடவடிக்கைகளை எடுக்கும்படி மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், கடந்த இரு மாதங்களாக தவேரா கார் விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், அதன் மூலம் ஏராளமான வருவாய் இழப்பும் ஏற்பட்டு வருகிறது. ஜெனரல் மோட்டார்ஸ் மீது மோசடி வழக்குகளும் பாயும் என்று தெரிகிறது.

கடந்த ஆண்டு வருவாயில் பெரும் இழப்பை சந்தித்த அந்த நிறுவனத்துக்கு இந்த பிரச்சினை மிகப்பெரிய இழப்பையும், நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது. அத்தோடு, இந்தியாவில் செவர்லே பிராண்டின் நம்பகத் தன்மையும் வாடிக்கையாளர் மத்தியில் கேள்விக்குறியாக்கியுள்ளது.

Most Read Articles
English summary
The Chevrolet Tavera recall will cause a 500 crore loss for GM.
Story first published: Sunday, August 11, 2013, 11:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X