காம்பெக்ட் அம்பாசடர் காரில் ஃபியட் டீசல் எஞ்சினை பொருத்த எச்எம் முடிவு?

அடுத்த ஆண்டு வெளி வர இருக்கும் புதிய கார் மாடல்களில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மாடல்களில் புதிய காம்பெக்ட் அம்பாசடரும் ஒன்று.

இந்த நிலையில், புதிய அம்பாசடர் காரில் அதிக சக்தி கொண்ட புதிய டீசல் எஞ்சினை பொருத்துவதற்கு ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது.

விற்பனை மந்தம்

விற்பனை மந்தம்

சமீபத்தில் என்கோர் என்ற பெயரில் பிஎஸ்-4 டீசல் எஞ்சின் கொண்ட அம்பாசடர் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த புதியத மாடல் மூலம் விற்பனையில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், ஆஹா, ஓஹோ என்று சொல்லுமளவுக்கு இல்லை.

பவர் பத்தாது...

பவர் பத்தாது...

என்கோர் அம்பாசடர் காரில் பொருத்தப்பட்டிருக்கும் புதிய பிஎஸ்-4 அம்சம் கொண்ட 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 49 எச்பி ஆற்றலையும், 112.5 என்எம் டார்க்கையும் அளிக்கும். இது டாக்சி மார்க்கெட்டுக்கு ஓகே. ஆனால், தனி நபர் மார்க்கெட்டில் போட்டியாளர்களை ஒப்பிடும்போது இது போதிய பவர் கொண்டதாக இல்லை.

 ஃபியட் எஞ்சின்

ஃபியட் எஞ்சின்

இதை உணர்ந்துள்ள எச்எம் தற்போது புதிய டீசல் எஞ்சினை காம்பெக்ட் அம்பாசடரில் பொருத்துவதற்கு முடிவு செய்துள்ளது. ஸ்விஃப்ட் உள்ளிட்ட பல கார் மாடல்களில் உயிர் கொடுத்து வரும் ஃபியட்டின் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சினை காம்பெக்ட் அம்பாசடரில் பொருத்தலாம் என்று யோசனை செய்துள்ளது. இதற்கான முயற்சிகளை தற்போது ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

 வெற்றி

வெற்றி

புதிய காம்பெக்ட் அம்பாசடர் காரை தனது எதிர்கால வளர்ச்சிக்கு மிக முக்கியமானதாக ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் கருதுகிறது. அந்த கார் வெற்றி பெற்றால்தான் எதிர்கால வர்த்தகத்துக்கு பிடிமானம் கிடைக்கும். இந்த விஷயத்தில் எச்எம் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. போட்டியாளர்களுக்கு இணையானதாகவும், அதிர்வுகள் குறைவாகவும், சிறப்பான பவர் கொண்ட எஞ்சினை புதிய காம்பெக்ட் அம்பியில் பொருத்தி வெளியிட ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

 அறிமுகம்

அறிமுகம்

அடுத்த ஆண்டு புதிய பெயரில் 4 மீட்டருக்கும் குறைவான இந்த புதிய காம்பெக்ட் அம்பாசடர் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இளைய வாடிக்கையாளர்களை கவரும் வகையில் தோற்றம் கொண்டதாக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புதிய பெயரில் வரும் என்றும், இளைய வாடிக்கையாளர்களை கவரும் வகையில் மாற்றங்களை கொண்டிருக்கும் என்று எச்எம் தரப்பு கூறுகிறது.

Most Read Articles
English summary
If there is one aspect of Hindustan Motors which we admire is its resilience. One of India's oldest automaker has been selling just one model, the iconic Ambassador, for a really long time and despite a whole host of challenges HM has managed to hold on to a small pocket of loyal customers.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X