100 பிஎஸ் பவருடன் வரும் நெஞ்சை நிமிர்த்தி வரும் டீசல் அமேஸ்!

By Saravana
Honda Amaze
98.6 பிஎச்பி (100பிஎஸ்)ஆற்றல் கொண்ட டீசல் எஞ்சினுடன் அமேஸ் கார் வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

விற்பனையில் முன்னிலை வகிக்கும் மாருதி டிசையருக்கு போட்டியாக ஹோண்டா அமேஸ் வர இருக்கிறது. ஆனால், அமேஸ் அறிமுகம் மற்றும் இதர தகவல்களை ஹோண்டா இதுவரை வெளியிடவில்லை.

இந்த நிலையில், அமேஸ் காருக்கான டீசல் எஞ்சின் ராஜஸ்தான் மாநிலம், தபுகெரா ஆலையில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கிருந்து அமேஸ் டீசல் எஞ்சின் பற்றிய சில தகவல்கள் கசிந்துள்ளது.

பிரபல ஆட்டோமொபைல் தளமான பிஎஸ்மோட்டாரிங் வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில் அமேஸ் காருக்கான டீசல் எஞ்சின் 100 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், டார்க் விபரங்கள் தெரியவில்லை.

எனவே, என்ட்ரி லெவல் செடான் மார்க்கெட்டில் அதிக பவர் கொண்ட காராக அமேஸ் வர இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த டீசல் எஞ்சின் மற்றும் அதன் பிஸ்டன்கள் இலகு எடை கொண்ட அலுமினியம் கொண்டதாக இருக்கும் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Honda Amaze diesel engine will deliver 100 PS power, says reports.
Story first published: Wednesday, March 20, 2013, 10:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X