30,000 ஹோண்டா அமேஸ் கார்கள் விற்பனை: புதிய சாதனை

விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு 4 மாதங்களில் 30,000 அமேஸ் கார்களை ஹோண்டா விற்பனை செய்துள்ளது. ஹோண்டாவின் இந்திய விற்பனை வரலாற்றில் இது ஒரு புதிய சாதனையாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அமேஸ் காருக்கான முன்பதிவு தொடர்ந்து நல்ல எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது. இதையடுத்து, கிரேட்டர் நொய்டாவிலுள்ள ஆலையில் அமேஸ் காரின் உற்பத்தியை அதிகரிக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. அமேஸ் விற்பனைக்கு முக்கிய காரணிகள் எவை என்பதை ஸ்லைடரில் காணலாம்.

இட வசதி

இட வசதி

அமேஸ் காரின் பின்புற இருக்கை அமைப்பு பயணிகளுக்கு கூடுதல் இடவசதியை அளிப்பதாக இருக்கிறது. முன்புற இருக்கையை பின்னால் முழுவதுமாக நகர்த்தினாலும் பின்புறம் அமர்ந்திருப்பவர்களுக்கு அதிக தொந்தரவு இல்லை. காரை முதல் பார்ப்பவர்கள் குறிப்பிட்டு சொல்லும் விஷயமும் இதுதான்.

பூட் ரூம்

பூட் ரூம்

4 மீட்டருக்குள் வடிவமைக்கப்பட்ட இந்த கார் 400 லிட்டர் அளவுக்கு தாராளமாக பொருட்கள் வைப்பதற்கான அறையை கொண்டுள்ளது.

மைலேஜ்

மைலேஜ்

பெட்ரோல் கார் நகர்ப்புறத்தில் லிட்டருக்கு 15.5 கிமீ மைலேஜையும், நெடுஞ்சாலையில் லிட்டருக்கு 18 கிமீ மைலேஜையும் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டீசல் மாடல் லிட்டருக்கு 25.8 கிமீ மைலேஜ் தரும் என ஹோண்டா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தியாவின் அதிக மைலேஜ் கொடுக்கும் டீசல் காராக அமேஸ் திகழ்கிறது.

நம்பகத்தன்மை

நம்பகத்தன்மை

ஹோண்டாவின் பிராண்டு மதிப்பும் அமேஸ் காருக்கான வரவேற்பை வெகுவாக கூட்டியதற்கான காரணம். மேலும், விற்பனைக்கு பிந்தைய சேவையில் கூடுதல் உத்தரவாதங்களையும், திட்டங்களையும் ஹோண்டா வழங்குகிறது.

 வேரியண்ட்டுகள்

வேரியண்ட்டுகள்

வாடிக்கையாளர் தங்களது பட்ஜெட்டுக்கு தகுந்தவாறு வேரியண்ட்டை தேர்வு செய்து கொள்ளும் விதத்தில் பெட்ரோல் மாடல் 6 வேரியண்ட்டுகளிலும், டீசல் மாடல் 4 வேரியண்ட்டுகளிலும் கிடைக்கிறது.

வண்ணங்கள்

வண்ணங்கள்

மெஜஸ்டிக் புளூ மெட்டாலிக், கார்னேலியன் ரெட் பியர்ல், அர்பன் டைட்டானியம் மெட்டாலிக், அலபாஸ்டர் சில்வர் மெட்டாலிக், கிறிஸ்டல் பிளாக் பியர்ல், டஃபேட்டா ஒயிட் ஆகிய 6 வண்ணங்களில் விருப்பம் போல் செய்து கொள்ளலாம்.

வாரண்டி

வாரண்டி

அமேஸ் காருக்கு 2 ஆண்டுகள் அல்லது 40,000 கிமீ.,க்கான வாரண்டி வழங்கப்படுகிறது. "ஹோண்டா கேர் மெயின்டெனன்ஸ் பேக்கேஜ்" என்ற பெயரில் வழங்கப்படும் இந்த சிறப்பு பராமரிப்பு திட்டத்துக்காக பெட்ரோல் காருக்கு 9,996 ரூபாயும், டீசல் மாடலுக்கு 15,375 ரூபாயும் கூடுதலாக செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஆன்ரோடு விலை

சென்னை ஆன்ரோடு விலை

பெட்ரோல் மாடல் விலை விபரம்

  • இ வேரியண்ட்: ரூ.5,96,780
    • எஸ் வேரியண்ட்: ரூ.6,25,724
      • இஎக்ஸ் வேரியண்ட்: ரூ.6,67,855
        • விஎக்ஸ் வேரியண்ட்: ரூ.7,77,954
          • எஸ் ஆட்டோமேட்டிக்: ரூ.7,80,792
            • விஎக்ஸ் ஆட்டோமேட்டிக்: ரூ.8,82,605
            • சென்னை ஆன்ரோடு விலை

              சென்னை ஆன்ரோடு விலை

              டீசல் மாடல் விலை விபரம்

              • இ வேரியண்ட் : ரூ.7,27,000
                • இஎக்ஸ் வேரியண்ட் : ரூ.7,55,240
                  • எஸ் வேரியண்ட் : ரூ.7,93,854
                    • விஎக்ஸ் வேரியண்ட்: ரூ.9,13,430
Most Read Articles
English summary
Honda Cars India Ltd. (HCIL), leading manufacturer of premium cars in India, hasachieveda new sales milestone with the delivery of 30,000 Honda Amaze in the country. The latest family sedan from Honda in the Indian market, Honda Amaze, has clocked the fastest 30,000 sales for any new model in the company’s history in India. 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X