சீனாவில் ஹோண்டாவின் புதிய செடான் கார் அறிமுகம்!

By Saravana

சீனாவில் ஹோண்டாவின் புதிய செடான் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பீஜிங் ஆட்டோ ஷோவில் கான்செப்ட் சி என்ற பெயரில் வைக்கப்பட்டிருந்த இந்த செடான் கார் சிவிக் மற்றும் அக்கார்டு கார்களுக்கு இடையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. சீன மார்க்கெட்டுக்காக ஹோண்டா பிரத்யேகமாக வடிவமைத்த கார் இது.

139 பிஎஸ் பவரையும், 172 என்எம் டார்க்கையும் அளிக்க வல்ல 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடல்களில் கிடைக்கும். 7 இஞ்ச் திரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட ஏராளமான தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு வசதிகளுடன் களமிறங்கி உள்ளது. இந்திய மதிப்பில் ரூ.11.24 லட்சத்தில் அங்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த காரை பற்றி தகவல்கள் தகவல்கள் தருவதற்கான காரணம் இருக்கிறது. இந்த காரின் டிசைன் அம்சங்களுடன்தான் அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய ஹோண்டா சிட்டி வடிவமைக்கப்பட்டு வருவதாக தகவல் கசிந்துள்ளது. கிரைடர் செடான் காரில் இருக்கும் வெளிப்புற டிசைன் தாத்பரியங்கள் சிலவற்றை புதிய சிட்டியிலும் எடுத்து கையாளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஸ்லைடரில் கிரைடர் செடான் காரின் படங்களை காணலாம்.

ஹோண்டா கிரைடர்
ஹோண்டா கிரைடர்
ஹோண்டா கிரைடர்
ஹோண்டா கிரைடர்
ஹோண்டா கிரைடர்
ஹோண்டா கிரைடர்
ஹோண்டா கிரைடர்
ஹோண்டா கிரைடர்
Most Read Articles
English summary
Japanese car maker Honda have today began the sales of the CRIDER, Honda’s first model developed in China for Chinese market. Honda Crider's features, specs through pictures. 
Story first published: Friday, June 28, 2013, 11:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X