உயர்தர டிசைன் தத்துவதில் கார்களை களமிறக்கும் ஹோண்டா

By Saravana

ஹோண்டா கார்களின் தரம் இன்னும் ஒரு படி மேலே போகிறது. சர்வதேச அளவில் விற்பனைக்கு செல்லும் அனைத்து புதிய கார்களையும் உயர்தர டிசைன் தாத்பரியத்தில் வடிவமைக்கப்பட்டு வருவதாக ஹோண்டா அறிவித்துள்ளது. 'Exciting H Design!!!' என்ற புதிய டிசைன் தாத்பரியத்தில் புதிய கார்கள் வடிவமைக்கப்படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன் ஜப்பானில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட புதிய ஹோண்டா ஜாஸ் கார் கூட இந்த புதிய டிசைன் தாத்பரியத்தில் வடிவமைக்கப்பட்டதுதான். இந்த புதிய டிசைன் தத்துவம் ஹோண்டாவின் பிரத்யேக டிசைன் ஆளுமையை பரைசாற்றுவதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஆச்சரியக்குறிகளின் அர்த்தம்

ஆச்சரியக்குறிகளின் அர்த்தம்

புதிய டிசைன் தாத்பரியத்தின் கடைசி மூன்று ஆச்சரியக் குறிகளுக்கு 'High Tech, High Tension, High Touch' ஆகியவற்றை அர்த்தமாக கொண்டு நிற்பதாக ஹோண்டா தெரிவித்துள்ளது. மேலும், வெளிப்புறம், உட்புறம் இரண்டிலும் இந்த மூன்று புதிய வடிவமைப்பு தத்துவங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 வெளிப்புற டிசைன்

வெளிப்புற டிசைன்

"Solid Wing face" என்ற சிறகு விரிந்து பறக்கம் பறவையை மனதில் கொண்ட கிரில் டிசைன் எதிர்கால மாடல்களில் பயன்படுத்தப்படும். மேலும், ஹோண்டா ஆங்கில பெயரின் முதல் எழுத்தான எச் கிரில்லுக்கு நடுவில் இடம்பெற்றிருக்கும். ஹெட்லைட்டுகளும் நவீன வடிவமைப்பு தத்துவத்தை கொண்டிருக்கும். உறுதிமிக்கதாகவும், மிக நேர்த்தியானதாகவும் பாடி டிசைன் செய்யப்பட்டிருக்கும். ஹோண்டாவின் கைவண்ணத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மனதை மயக்கும் வகையில் மிக சிறப்பாக இருக்கும்.

 இன்டிரியர்

இன்டிரியர்

இன்டிரியரை பொறுத்தவரை மிக ஸ்போர்ட்டியான டிசைனுடன் கூடிய காக்பிட் மற்றும் தரமான பாகங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

 தொழில்நுட்ப வசதிகள்

தொழில்நுட்ப வசதிகள்

வெளிப்புற, உட்புறத்தை தவிர புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் கார்கள் வெளியிடப்படும்.

கவர்ச்சி ததும்பும்

கவர்ச்சி ததும்பும்

மொத்தத்தில் புதிய டிசைன் தாத்பரியத்தில் வரும் அனைத்து கார்களும் கவர்ச்சி ரசமும், தரமும் பின்னி பிணைந்தாடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிசைன் தாத்பரியம் கொண்ட புதிய ஜாஸ் கார் அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
The 2014 Honda Jazz that Honda launched a few weeks back in Japan has front fascia that is unlike any other Honda vehicle. This, as it turns out, is the new design language that the Japanese automaker has adapted. Called ‘Exciting H Design!!!', Honda says it will apply the new design language across its global product lineup to "promote a more unique character and stronger presence around the world."
Story first published: Saturday, September 7, 2013, 11:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X