ஜப்பானில் 2 மாதங்களில் விற்பனையில் நம்பர் - 1 ஆன புதிய ஹோண்டா ஜாஸ்!

By Saravana

தனது தாயகமான ஜப்பானில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட 2 மாதங்களில் விற்பனையில் முதலிடத்தை பிடித்துள்ளது ஹோண்டாவின் புதிய ஜாஸ். மிக மிக நேர்த்தியான டிசைன், அதிக எரிபொருள் சிக்கனம், தரமான பாகங்கள் என உலக வாடிக்கையாளர்களின் கவனத்தை புதிய ஜாஸ் கார் ஈர்த்துள்ளது.

ஜப்பானில் ஃபிட் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஜாஸ் காரின் புதிய மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு 2 மாதங்களில் விற்பனையில் நம்பர் 1 இடத்தை தொட்டுள்ளது. ஹோண்டாவே எதிர்பாராத விற்பனை அளவை புதிய ஜாஸ் எட்டிப் பிடித்துள்ளது.

எகிடுதகிடான முன்பதிவு

எகிடுதகிடான முன்பதிவு

முதல் மாதத்திலேயே புதிய ஜாஸ் காருக்கு அங்கு 62,000 பேர் முன்பதிவு செய்தனர். ஹோண்டா எதிர்பார்த்த முன்பதிவைவிட இது மிக அதிகம்.

 விற்பனை

விற்பனை

முதல் மாதத்தில் 19,388 புதிய ஜாஸ் கார்களை ஹோண்டா டெலிவிரி வழங்கியது. மேலும், ஜப்பானில் அதிகம் விற்பனையாகும் கார் பட்டியலில் 3வது இடத்தை முதல் மாதத்திலேயே பிடித்தது. முதல் இடத்தில் டொயோட்டா அக்வா(26,543 கார்கள்), இரண்டாவது இடத்தில் டொயோட்டா பிரையஸ்(23,069கார்கள்) ஆகிய மாடல்கள் பிடித்தன.

நம்பர் - 1

நம்பர் - 1

விற்பனைக்கு வந்த 2-வது மாதத்தில் ஜப்பானில் அதிகம் விற்பனையாகும் கார் என்ற பெருமையை புதிய ஜாஸ் பிடித்துள்ளது. கடந்த மாதம் 23,281 ஹோண்டா ஜாஸ் கார்கள் விற்பனையானது. இதற்கு அடுத்து 20,886 டெயோட்டா பிரையஸ் மற்றும் 19,984 டொயோட்டா அக்வா கார்கள் விற்பனையாகி அடுத்தடுத்த இடங்களை பிடித்தன. பிரையஸ் ஹைபிரிட் காரின் காம்பெக்ட் வெர்ஷன்தான் பிரையஸ் சி என்றழைக்கப்படும் அக்வா என்பது குறிப்பிடத்தக்கது.

 ஹைபிரிட் மோகம்

ஹைபிரிட் மோகம்

ஜப்பானில் ஹைபிரிட் கார்களுக்கு வாடிக்கையாளர்களிடம் அமோக வரவேற்பு காணப்படுகிறது. இதுவரை விற்பனையாகியுள்ள புதிய ஜாஸ் கார்களில் 70 சதவீதம் ஹைபிரிட் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. ஹைபிரிட் ஜாஸ் காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் இணைந்து லிட்டருக்கு 36 கிமீ மைலேஜ் தரும் என ஹோண்டா தெரிவிக்கிறது.

 விரைவில் இந்தியாவுக்கு...

விரைவில் இந்தியாவுக்கு...

புதிய ஜாஸ் கார் டிசைன் இந்திய வாடிக்கையாளர் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் புதிய ஜாஸ் கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஆனால், இந்தியாவில் ஹைபிரிட் வேரியண்ட்டுக்கு பதிலாக 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
The 2014 Honda Jazz, sold as Fit in Japan, has surpassed all expectations held by the car maker in terms of sales in its home market. The all new Fit bearing Honda's new ‘Exciting H Design' was launched in the island country on September 5th and its taken just two months for the hatch to settle on top.
Story first published: Tuesday, November 12, 2013, 10:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X