ஹோண்டா எம்பிவி காரின் விபரங்கள் கசிந்தன

By Saravana

மாருதி எர்டிகா காரின் போட்டியாளராக கருதப்படும் ஹோண்டா எம்பிவி கார் வரும் 19ந் தேதி துவங்கும் இந்தோனேஷிய சர்வதேச ஆட்டோ ஷோவில் இந்த புதிய கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதற்கு முன்னதாக அந்த காரின் முக்கிய விபரங்கள் கசி்ந்துள்ளன.

மொபிலோ என்ற பெயரில் இந்த புதிய கார் அறிமுகம் செயய்ப்பட உள்ளதாக தெரிகிறது. எஸ், இ மற்றும் இ ஆட்டோமேட்டிக் ஆகிய 3 வேரியண்ட்டுகளில் இந்த கார் விற்பனைக்கு கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

பேஸ் வேரியண்ட்

பேஸ் வேரியண்ட்

இதில், எஸ் என்ற பேஸ் வேரியண்ட்டில் பீயேஜ் இன்டிரியர், மியூசிக் சிஸ்டம், டில்ட் ஸ்டீயரிங், பவர் விண்டோஸ், டியூவல் ஏர்பேக்குகள் ஆகியவை நிரந்தர அம்சங்களாக இடம்பெற்றிருக்குமாம். 15 இஞ்ச் ஸ்டீல் வீல்கள், எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் ரியர் வியூ கண்ணாடிகள், ரியர் வைப்பர்கள் ஆகியவையும் இருக்கும்.

மிட் வேரியண்ட்

மிட் வேரியண்ட்

இ மேனுவல் டிரான்ஸ்மிஷன் வேரியண்ட்டில் டியூவல் இன்டிரியர் விளக்குகள், ஸ்லைடிங் இருக்கைகள், 15 இஞ்ச் அலாய் வீல்கள், பார்க்கிங் சென்சார், இன்டிகேட்டர்களுடன் கூடிய ரியர் வியூ கண்ணாடிகள் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

ஆட்டோமேட்டிக் வேரியண்ட்

ஆட்டோமேட்டிக் வேரியண்ட்

இ சிவிடி ஆட்டோமேட்டிக் மாடலில் ஏபிஎஸ், பனி விளக்குகள், குரோம் பூச்சுடன் கூடிய பாகங்கள், சிவிடி பேட்ஜ் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

பெட்ரோல் மாடல்

பெட்ரோல் மாடல்

இந்தோனேஷியாவில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் அங்கு வர இருக்கிறது. இந்த எஞ்சின் 117 பிஎஸ் பவரையும், 146 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

இந்தியாவுக்கு டீசல் மாடல்

இந்தியாவுக்கு டீசல் மாடல்

அடுத்த ஆண்டு இந்தியாவில் இந்த புதிய எம்பிவி கார் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்தியாவில் ஹோண்டா அமேஸ் காரில் பொருத்தப்பட்டிருக்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வர உள்ளது.

Most Read Articles
English summary
Honda Brio MPV will premier at the 2013 Indonesian International motor Show on September 19th 2013. To be named Honda Mobilio in Indonesia, the new Brio based seven seater MPV is expected to be launched in India next year.
Story first published: Monday, September 9, 2013, 13:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X