பல்சருக்கு நேரடி போட்டியாக வரும் ஹோண்டாவின் புதிய 150 சிசி பைக்

Honda Verza
பஜாஜ் பல்சருக்கு நேரடி போட்டியை கொடுக்கும் வகையில் புதிய 150சிசி பைக்கை ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.

150சிசி பைக் மார்க்கெட்டில் பஜாஜ் ஆட்டோவின் பல்சர் முன்னிலை வகிக்கிறது. பல்சருக்கு இணையான முக்கிய மாடல்களில் ஹோண்டா யூனிகார்ன் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆனால், விற்பனையில் பல்சரை விஞ்சமுடியவில்லை. இந்த நிலையில், பல்சரை கட்டம் கட்டும் முயற்சிகளை ஹோண்டா தீவிரப்படுத்தியிருக்கிறது.

இதற்காக, புதிய 150 சிசி பைக் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்தோனேஷிய மார்க்கெட்டில் சமீபத்தில் அறிமுகப்படுத்திய வெர்ஸா 150 சிசி மோட்டார்சைக்கிள்தான் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது.

இந்த புதிய பைக் மாடல் ட்வின் ஸ்பார்க் பிளக் தொழில்நுட்பத்துடன் வருகிறது. 13.2 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். 150சிசி சாதாரண ரக பைக் மார்க்கெட்டில் யூனிகார்ன், டேஸ்லர் என இரு மாடல்களையும், சிபிஆர் 150ஆர் ஸ்போர்ட்ஸ் பைக்கையும் ஹோண்டா விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில், புதிய வெர்ஸா பைக் யூனிகார்ன் மற்றும் டேஸ்லர் பைக்குகளுக்கு இடையிலான விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்டுக்கு 4 புதிய பைக் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக சமீபத்தில் ஹோண்டா தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Honda Motorcycles and Scooter India is planning to launch a new 150cc motorcycle in the market. Honda's new 150cc motorcycle will be designed to compete fiercely against the likes of the Bajaj Pulsar 150, Hero Hunk and the Yamaha FZ16
Story first published: Thursday, January 24, 2013, 10:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X