கூடுதல் வசதிகளுடன் பிரியோவை அறிமுகப்படுத்தும் ஹோண்டா

Honda plans to launch new top variant Brio
கூடுதல் வசதிகள் கொண்ட பிரியோவின் டாப் வேரியண்ட்டை அறிமுகப்படுத்த இருக்கிறது ஹோண்டா.

மார்க்கெட்டில் சிறந்த ஹேட்ச்பேக் கார் வரிசையில் ஹோண்டா பிரியோவும் இடம் பிடித்திருக்கிறது. மாதத்திற்கு சராசரியாக 2,000 பிரியோ கார்களை ஹோண்டா விற்பனை செய்து வருகிறது.

வசதிகளிலும், அம்சங்களிலும் சிறந்த காராகவே இருந்தாலும் இதன் டாப் வேரியண்ட்டில் பிற மாடல்களை ஒப்பிடும்போது சில வசதிகள் இல்லாதது வாடிக்கையாளர்களிடம் சிறு முக சுழிப்பை ஏற்படுத்தியது.

எனவே, இந்த குறையை போக்கும் விதத்தில் கூடுதல் வசதிகளுடன் பிரியோ டாப் வேரியண்ட்டை அறிமுகப்படுத்த இருக்கிறது ஹோண்டா. காரின் பின்புற கண்ணாடிக்கு டீஃபாகர் வசதி, ரியர் வைப்பர், மாற்றிக் கொள்ளும் வசதிகொண்ட டிரைவர் இருக்கை உள்ளிட்ட வசதிகளுடன் பிரியோ வர இருக்கிறது.

இதன்மூலம், வசதிகள் மற்றும் அம்சங்களிலும் மேலும் சிறந்த காராக பிரியோ மாறும். இதனிடையே, பிரியோவின் செடான் வெர்ஷனாக வரும் அமேஸ் கார் டீசல் மாடலிலும் அறிமுகமாக இருக்கிறது. 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் அமேஸ் வர இருக்கிறது.

இதே டீசல் எஞ்சினை பிரியோவிலும் பொருத்துவதற்கு ஹோண்டா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை, டீசல் மாடலிலும் பிரியோ அறிமுகம் செய்யப்பட்டால் நிச்சயம் விற்பனையில் புதிய இலக்குகளை தொடும் என நம்பலாம்.

Most Read Articles
English summary
Japanese car maker Honda is expected to launch new top variant Brio hatchback with additional features. The new variant will come with some additional equipment like a rear de-fogger and driver seat height adjustment.
Story first published: Saturday, February 2, 2013, 10:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X