ஜப்பானில் ஹோண்டா வெஸல் எஸ்யூவி விற்பனைக்கு வந்தது - விபரம்!!

By Saravana

ஜப்பானில் ஹோண்டாவின் புதிய காம்பெக்ட் எஸ்யூவியான வெஸல் விற்பனைக்கு வந்துள்ளது. அடுத்த ஆண்டு மத்தியில் இந்தியா வரும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த புதிய காம்பெக்ட் எஸ்யூவி ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், ரெனோ டஸ்ட்டருக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

புதிய தலைமுறை ஜாஸ் கார் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய எஸ்யூவி நகர்ப்புறத்துக்கு ஏற்ற எஸ்யூவி மாடலாக ஹோண்டா குறிப்பிடுகிறது. அசத்தலான டிசைன் கொண்ட இந்த எஸ்யூவியின் கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

எஞ்சின்

எஞ்சின்

ஜப்பான் மார்க்கெட்டில் பெட்ரோல் மற்றும் ஹைபிரிட் மாடல்களில் விற்பனைக்கு வந்துள்ளது. பெட்ரோல் மாடலில் 131 பிஎஸ் பவரையும், 155 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

டிரான்ஸ்மிஷன்

டிரான்ஸ்மிஷன்

2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் கொண்ட சிவிடி டிரான்ஸ்மிஷன் மாடல்களில் அங்கு விற்பனைக்கு கிடைக்கிறது.

ஹைபிரிட் மாடல்

ஹைபிரிட் மாடல்

ஹைபிரிட் மாடலில் பெட்ரோல் எஞ்சினுக்கு துணைபுரியும் வகையில் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் இந்த ஹைபிரிட் மாடலில் 7 ஸ்பீடு டியூவல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் கொண்டதாக கிடைக்கும்.

 மைலேஜ்

மைலேஜ்

பெட்ரோல் மாடலில் 2 வீல் டிரைவ் மாடல் லிட்டருக்கு 20.6 கிமீ மைலேஜையும், 4 வீல் டிரைவ் மாடல் லிட்டருக்கு 19 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹைபிரிட் மாடல் 27 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை

விலை

இந்திய மதிப்பில் ஹோண்டா வெஸல் எஸ்யூவியின் 2 வீல் டிரைவ் மாடல் ரூ.11.14 லட்சத்திலும், 4 வீல் டிரைவ் மாடல் 13.04 லட்சத்திலும், ஹைபிரிட் மாடல் ரூ.15.96 லட்சத்தில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Vezel, a compact SUV/crossover model that was revealed a few weeks back at the Tokyo Motor Show, has been launched in Japan. The compact SUV sits below the CR-V and is said to offer SUV like lower body stability, coupe like styling and MPV like interior space.
Story first published: Saturday, December 21, 2013, 14:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X