கிராண்ட் ஐ10 செடான் மாடலும் அறிமுகம்: ஹூண்டாய் உறுதி

By Saravana

4 மீட்டருக்கும் குறைவான செடான் கார்களுக்கான வரவேற்பு அதிகமிருக்கிறது. மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ் ஆகியவை இந்த செக்மென்ட்டின் கோலோய்ச்சி வருகின்றன.இந்த நிலையில், ஹூண்டாயும் இந்த மார்க்கெட்டில் புதிய காரை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

கடந்த வாரம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட கிராண்ட் ஐ10 அடிப்படையிலான புதிய செடான் கார் மற்றும் புதிய எஸ்யூவி மாடலை அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்ய இருப்பதாக ஹூண்டாய் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆக்ஸென்ட்டுக்கு மாற்று...

ஆக்ஸென்ட்டுக்கு மாற்று...

ஆக்ஸென்ட் காருக்கு விடை கொடுக்கப்பட்ட விட்ட நிலையில், அதற்கு மாற்றாக இந்த புதிய கார் நிலை நிறுத்தப்பட உள்ளது. இந்த கார் வெர்னாவைவிட விலை குறைவானதாக வருவதால் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

(மாதிரிக்காக ஹூண்டாய் எச்பி 20எஸ் கார் படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன)

 டிசைனில் மாற்றம்

டிசைனில் மாற்றம்

கிராண்ட் ஐ10 காரைவிட முகப்பில் சில மாற்றங்களுடன் புதிய காம்பெக்ட் செடான் கார் டிசைன் செய்யப்பட்டிருக்கும் என தெரிகிறது.

எஞ்சின்

எஞ்சின்

பெட்ரோல் மற்றும் டர்போ டீசல் எஞ்சின் மாடல்களில் விற்பனைக்கு வருவதும் உறுதி. ஆனால், ஆக்ஸென்ட் போன்று எல்பிஜி, சிஎன்ஜி ஆப்ஷன்களில் வருமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது.

 போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ் ஆகிய கார்களுக்கு நேரடி போட்டியை தரும்.

 புதிய எஸ்யூவி

புதிய எஸ்யூவி

புதிய காம்பெக்ட் செடான் தவிரவும், புதிய காம்பெக்ட் எஸ்யூவி மாடலையும் ஹூண்டாய் உறுதிப்படுத்தியுள்ளது. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்ட காம்பெக்ட் எஸ்யூவி மாடல்களுக்கு இது நேரடி போட்டியை கொடுக்கும்.

Most Read Articles
English summary
The compact sedan/sub-4 meter segment, however you want to call it, is thriving in India at present. What started off as an escape strategy from the tax hike has now been realised by Indian automakers as the perfect strategy for the local market. Hence, we now have more new compact sedan models than cars from anyother other segment.
Story first published: Tuesday, September 10, 2013, 13:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X