ஹூண்டாயின் ஐ20 காரின் ரேஸ் மாடல் அறிமுகம்: உங்களுக்கான பெர்ஃபார்மென்ஸ் மாடலும் வருகிறது

By Saravana

தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் அடுத்த ஆண்டு வேர்ல்டு ராலி சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தில் களமிறங்குகிறது. இதற்காக வடிவமைக்கப்பட்ட அதிசக்திவாய்ந்த ஐ20 காரை அறிமுகம் செய்துள்ளது.

மேலும், ஐ20 உள்ளிட்ட கார்களின் அதிக பெர்ஃபார்மென்ஸ் கொண்ட மாடல்களையும் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அதுபற்றிய ஒரு செய்தித் தொகுப்பு.

இந்திய தயாரிப்பு

இந்திய தயாரிப்பு

இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஐ20 கார் ஜெர்மனியில் உள்ள ஹூண்டாய் ஆராய்ச்சி மையத்தில் வைத்து ராலி ரேஸ் கார் மாடலாக மாற்றப்பட்டுள்ளது.

ஷெல் பார்ட்னர்

ஷெல் பார்ட்னர்

ஹூண்டாய் ராலி ரேஸ் காரில் ஷெல் ஆயில் கம்பெனியின் ஷெல் ஹெலிக்ஸ் என்ற பிராண்டு ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டிருக்கும். ஹூண்டாய் ராலி ரேஸ் அணியின் டைட்டில் பார்ட்னராக ஷெல் இணைந்துள்ளது.

என் வரிசை

என் வரிசை

ஹூண்டாய் தயாரிக்கும் அதிசக்திவாய்ந்த கார் மாடல்கள் ஆங்கில எழுத்தான என் என்ற வரிசையில் அறிமுகம் செய்யப்படும். என் என்ற எழுத்து தென்கொரியாவில் உள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் நாம்யாங் ஆராய்ச்சி மையத்தின் முதல் எழுத்தை குறிக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

ராலி ரேஸ் ஐ20 காரில் 300 எச்பி ஆற்றலையும், 400 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1.6 லிட்டர் டர்போசார்ஜ்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். 6 ஸ்பீடு சீக்குயன்ஷியல் கியர் பாக்ஸ் மூலம் 4 சக்கரங்களுக்கும் ஆற்றல் கடத்தப்படும்.

 பெர்ஃபார்மென்ஸ்

பெர்ஃபார்மென்ஸ்

0- 100 கிமீ வேகத்தை 4 நொடிகளில் தொட்டுவிடும் திறன் கொண்ட இந்த கார் மணிக்கு 200 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது. இந்த காரில் 80 லிட்டர் எரிபொருள் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது.

புதிய மாடல்கள்

புதிய மாடல்கள்

ராலி ரேஸ் மாடல் தவிர அதிக பெர்ஃபார்மென்ஸ் கொண்ட ஹேட்ச்பேக் மற்றும் செடான் கார் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
English summary
Hyundai is officially ready to step up its game. From that of a successful, but dull commuter car manufacturer to company that handles a motorsports program and has a performance division. And that transformation has been brought about in just over a year.
Story first published: Wednesday, December 11, 2013, 17:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X