ஹூண்டாயின் பெர்ஃபார்மென்ஸ் கார் பிராண்ட் உறுதியானது

By Saravana

குடும்ப கார் தயாரிப்பாளர் என்ற முத்திரையை தாண்டி இளைஞர்களை கவரும் வகையிலான பெர்ஃபார்மென்ஸ் கார்களை வெளியிட ஹூண்டாய் முடிவு செய்துள்ளது.

ஹோண்டா மியூஜென், டொயோட்டா டிஆர்டி, நிசான் நிஸ்மோ, மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி போன்று இந்த புதிய பிராண்டில் அதி கவர்ச்சியான தோற்றம் மற்றும் அதிக பெர்ஃபார்மென்ஸ் கொண்ட எஞ்சின்களுடன் தனது கார் மாடல்களை அறிமுகம் செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஆயத்தப் பணிகள்

ஆயத்தப் பணிகள்

இதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் ஏற்கனவே துவங்கப்பட்டுவிட்டன. வேர்ல்டு ராலி சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக புதிய அணியையும், ஐ20 காரையும் அந்த நிறுவனம் களமிறக்க உள்ளது.

தயாரிப்பு மையம்

தயாரிப்பு மையம்

ஜெர்மனியிலுள்ள, பிராங்க்ஃபர்ட் நகருக்கு அருகில் பெர்ஃபார்மென்ஸ் கார்களுக்கான மையத்தை ஹூண்டாய் அமைத்துள்ளது. இங்குதான் ராலி ரேஸ் ஐ20 கார் வடிவமைக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்படுகின்றன.

 முதல் சவால்

முதல் சவால்

அடுத்த ஆண்டுக்கான வேர்ல்டு ராலி சாம்பியன்ஷிப் போட்டியில் ராலி ரேஸ் ரக ஐ20 கார் முதன்முறையாக களமிறக்கப்பட உள்ளது.

புதிய தலைமுறை ஐ20

புதிய தலைமுறை ஐ20

2015ல் புதிய தலைமுறை ஐ20 காரை ஹூண்டாய் அறிமுகம் செய்ய உள்ளது. இதன் அடிப்படையிலான ராலி ரேஸ் காரும் தயாரிக்கப்பட உள்ளது. இதுதவிரவும், இந்த காரின் பெர்ஃபார்மென்ஸ் மாடலை பல்வேறு நாடுகளில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கும் ஹூண்டாய் திட்டமிட்டுள்ளதே இப்போதைய பரபரப்பாக இருக்கிறது.

இளைய வாடிக்கையாளர்

இளைய வாடிக்கையாளர்

இந்த புதிய கார்கள் மூலம் 25 வயது முதல் 35 வயதுடைய இளைய வாடிக்கையாளர்களை தனது வட்டத்துக்குள் கொண்டு வருவதற்கு ஹூண்டாய் கணக்கு போட்டுள்ளது. பிராங்க்ஃபர்ட் அருகில் அமைக்கப்பட்ட கார் தயாரிப்பு மையத்தில் வேர்ல்டு ராலி சாம்பியன்ஷிப் பந்தயங்களுக்கான கார்களை மட்டுமே ஹூண்டாய் தயாரிக்கும் என்று கருதிய நிலையில், எதிர்காலத்தில் அதிசக்திவாய்ந்த கார்களையும் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Most Read Articles
English summary
South Korean Auto maker Hyundai is set its mind to change its image of a mild, family oriented brand to a modern, aggressive and sporty one that younger buyers will relate to. To achieve this Hyundai will soon have a dedicated performance division of its own. Much like Nissan's Nismo, Honda's Mugen, Toyota's TRD, Mercedes-Benz's AMG and so on
Story first published: Saturday, October 19, 2013, 15:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X