பலமான வரவேற்பு... கிராண்ட் ஐ10 உற்பத்தியை கூட்டும் ஹூண்டாய்

முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு துரிதமாக டெலிவிரி கொடுக்கும் விதத்தில் கிராண்ட் ஐ10 கார் உற்பத்தியை கூட்டுவதற்கு ஹூண்டாய் மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது.

கடந்த மாதம் 3ந் தேதி ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. ஸ்டைலான டிசைன், டீசல் எஞ்சினுடன் வந்திருப்பதால் வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முதல் மாதத்திலேயே டாப் - 10 கார்கள் பட்டியலுக்குள்ளும் வந்துவிட்டது.

எக்கச்சக்க விசாரணை

எக்கச்சக்க விசாரணை

விற்பனைக்கு வந்து ஒரு மாதத்தை கடந்துள்ள நிலையில், இதுவரை 1.31 லட்சம் பேர் கிராண்ட் ஐ10 பற்றி டீலர்களில் விசாரணை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 முன்பதிவு

முன்பதிவு

இதுவரை 13,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதில், 8,411 கார்கள் டெலிவிரி கொடுக்கப்பட்டுள்ளன. மீதம் 4,500 கார்கள் டெலிவிரி கொடுக்க வேண்டிய நிலை இருக்கிறது.

உற்பத்தியை கூட்ட முடிவு

உற்பத்தியை கூட்ட முடிவு

வரவேற்பை கருதியும், வாடிக்கையாளர்களுக்கு துரிதமாக டெலிவிரி கொடுக்கவும் கிராண்ட் ஐ10 கார் உற்பத்தியை அதிகரிக்க இருப்பதாக ஹூண்டாய் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு மூத்த துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

டவுட்

டவுட்

இன்னும் 4,500 கார்களே டெலிவிரி கொடுக்க வேண்டிய நிலையில், உற்பத்தியை கூட்டுவதாக ஹூண்டாய் அறிவித்துள்ளது ஆட்டோமொபைல் துறையில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதற்கான விற்பனை கொள்கை குறித்த விளக்கத்தை அந்த நிறுவனம் தெரிவிக்கவில்லை.

முழு விபரம்

முழு விபரம்

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 பற்றிய A to Z விபரங்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Most Read Articles
English summary
Hyundai Motor India is planning to increase the production of the model to reduce the waiting period for customers.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X