சென்னையில் ஓட்டுனர் பயிற்சி மையத்தை துவங்கிய ஹூண்டாய்

By Saravana

சென்னை, தரமணியில் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய ஓட்டுனர் பயிற்சி மையம் துவங்கப்பட்டுள்ளது. இன்ஸ்டிடியூட் ஆஃப் ரோடு டிரான்ஸ்போர்ட்(IRT) அமைப்புடன் இணைந்து இந்த டிரைவிங் பயிற்சி மையத்தை ஹூண்டாய் நடத்த உள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இலவசகமாகவும், பொதுமக்களுக்கு சலுகை கட்டணத்திலும் ஓட்டுனர் பயற்சி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, ரூ.30 லட்ச ரூபாயை ஹூண்டாய் மோட்டார்ஸ் முதலாமாண்டில் செலவிட உள்ளது. இதுதவிரி, அடுத்து வரும் ஆண்டுகளில் விஸ்தீரணத்திற்காக ரூ.20 லட்சத்தை செலவிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Hyundai Eon

இந்த ஓட்டுனர் பயற்சி அமைப்பு மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய 100 மாணவர்களுக்கும், பொது பிரிவில் 100 மாணவர்களுக்கும் ஓட்டுனர் பயற்சி அளிக்க ஹூண்டாய் மற்றும் ஐஆர்டி அமைப்பு திட்டமிட்டுள்ளது.

10 மணி நேர செயல்வழி ஓட்டுனர் பயிற்சியும், போக்குவரத்து விதிகள் மற்றும் பாதுகாப்பான டிரைவிங் குறித்து 5 மணி நேரம் கற்பித்தல் முறையிலும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மாணவர்கள் தங்களுக்கு உகந்த நேரத்தை தேர்வு செய்துகொண்டு டிரைவிங் பயிற்சி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரைவிங் பயற்சி தவிரவும், ஆங்கில புலமை, யோகா மற்றும் கார் பராமரிப்பு குறித்த பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளன. இந்த பயிற்சிகளை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்களுக்கு ஓட்டுநர் உரிமமும் பெற்றத்தர உதவி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சியை நடத்துவதற்காக சென்னை ஐஆர்டி மையத்தின் வகுப்பறைகள் மற்றும் இதர வசதிகள் ரூ.15 லட்சத்தில் மேம்படுத்தப்பட உள்ளன. ஹூண்டாய் மோட்டார்ஸ் ஆலையில் டிரைவிங் பயற்சி பள்ளியும் நடந்து வருகிறது. இதன்மூலம், 400 ஊரக பகுதியை பின்தங்கிய மாணவர்களுக்கு ஓட்டுனர் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது.

Most Read Articles
Story first published: Monday, November 11, 2013, 16:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X