இந்தியாவில் புதிய டீசல் எஞ்சின் ஆலையை திறக்கும் ஹூண்டாய்!

Hyundai i10
ஹூண்டாய் கார் நிறுவனம் அமைத்து வரும் புதிய டீசல் எஞ்சின் தொழிற்சாலையில் விரைவில் உற்பத்தி துவங்க இருக்கிறது.

இந்தியாவில் டீசல் கார்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. இதனால், கார் நிறுவனங்கள் டீசல் கார்களை அறிமுகம் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றன.

இதேபோன்று, தென் கொரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாயும் புதிய டீசல் கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டது. இதற்காக, இந்தியாவில் புதிய டீசல் எஞ்சின் ஆலையை அமைக்க முடிவு செய்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன் மத்திய பட்ஜெட்டில் டீசல் கார்கள் மீது அதிக வரி விதிக்கப்படும் என கூறப்பட்டது. இதையடுத்து, ஹூண்டாய் தனது டீசல் எஞ்சின் ஆலை திட்டத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்தது.

மத்திய பட்ஜெட்டில் டீசல் கார்களுக்கு கூடுதல் வரி விதிப்பு எதுவும் அறிவிக்கப்படவில்லை. எனவே, தனது டீசல் எஞ்சின் உற்பத்தி ஆலை திட்டத்தை கையிலெடுத்தது ஹூண்டாய்.

300 மில்லியன் டாலர் முதலீட்டில் புதிய டீசல் எஞ்சின் ஆலையை ஹூண்டாய் அமைத்துள்ளது. இந்த ஆலையில் விரைவில் டீசல் எஞ்சின் உற்பத்தி துவங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

1.1 லிட்டர், 1.4 லிட்டர், 1.6 லிட்டர் ஆகிய டீசல் எஞ்சின்கள் இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளன. முதல்கட்டமாக, ஆண்டுக்கு 3 லட்சம் டீசல் எஞ்சின்களை இந்த ஆலையிலிருந்து உற்பத்தி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு தேவை மட்டுமின்றி ஏற்றுமதி தேவையையும் நிறைவு செய்யும் விதத்தில், இந்த புதிய டீசல் எஞ்சின் ஆலையை ஹூண்டாய் கட்டியுள்ளது.

Most Read Articles
English summary
Hyundai will start diesel engine production in India soon.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X