என்ன ஆச்சர்யம்? - கோவாவில் டீசலைவிட பெட்ரோல் விலை குறைவு!

By Saravana
Petrol Price Hike
டீசல் விலை உயர்த்தப்பட்டதன் காரணமாக, கோவாவில், டீசலை விட பெட்ரோல் குறைவான விலையில் விற்கப்படுகிறது.

டீசல் விலையை தவணை முறையில் மாதாமாதம் உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த மாதத்துக்கான தவணையாக சமீபத்தில் டீசல் விலை 90 பைசா உயர்த்தப்பட்டது.

இதன் எதிரொலியாக, கோவாவில் டீசலைவிட பெட்ரோல் விலை குறைந்துள்ளது. பொதுவாக, பிற மாநிலங்களில் டீசலைவிட பெட்ரோல் அதிக விலையில் விற்கப்படுகிறது. இரண்டிற்கும் அதிக விலை வித்தியாசம் இருக்கும்.

இந்த நிலையில், கோவாவில் டீசலைவிட பெட்ரோல் குறைவான விலையில் விற்கப்படுகிறது. கோவாவில் தற்போது பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ. 52.10க்கும், டீசல் ரூ.52.70க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதனால், அங்கு அண்டை மாநிலங்களை சேர்ந்த பெட்ரோல் வாகனங்களை பயன்படுத்துபவர்கள் அதிக அளவில் வந்து பெட்ரோல் நிரப்பி செல்வது வாடிக்கையாகியுள்ளது.

கடந்த ஆண்டு பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டு வரியை கோவா அரசு 0.1 சதவீதம் குறைத்தது. இதனால், அங்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.11 வரை குறைந்தது நினைவுகூறத்தக்கது.

Most Read Articles
English summary
After the recent hike in diesel price by 90 paise, the fuel’s per litre cost in Goa stood at Rs 52.70. Petrol in the state is priced at Rs 52.10. Last year, Goa government have slashed the VAT to 0.1 percent and thereby reducing prices of Petrol cheaper by Rs 11 per liter.
Story first published: Tuesday, May 14, 2013, 15:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X