ஜீப் பிராண்டு கார்களை சீனாவில் அசெம்பிள் செய்ய ஃபியட் முடிவு

Jeep Cherokee
இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் ஜீப் பிராண்டு எஸ்யூவி கார்கள் சீனாவில் அசெம்பிள் செய்யப்பட உள்ளது.

இந்திய மார்க்கெட்டில் தனி ஆவர்த்தனம் துவங்கியிருக்கும் ஃபியட் நிறுவனம் டீலர் கட்டமைப்பை வலுவாக்கி வருகிறது.

இதைத்தொடர்ந்து பல்வேறு புதிய பிராண்டுகளை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. அதில், அமெரிக்காவை சேர்ந்த ஜீப் பிராண்டு எஸ்யூவிகளையும் இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது ஃபியட்.

இந்த நிலையில், இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் ஜீப் பிராண்டு எஸ்யூவி கார்கள் சீனாவில் தயாரிக்கப்பட உள்ளது. ஜீப் பிராண்டு கார்களை தயாரிப்பதற்காக சீனாவை சேர்ந்த குவாங்ஸோ நிறுவனத்துக்கும், கிறிஸ்லைர் நிறுவனத்துக்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது.

டெட்ராய்ட் மோட்டார் ஷோவில் கலந்து கொண்ட குவாங்ஸோ நிறுவனத்தின் தலைவர் இந்த ஒப்பந்த தகவலை உறுதிப்படுத்தியிருக்கிறார். எனவே, இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் ஜீப் பிராண்டு எஸ்யூவி கார்கள் சீனாவில் தயாரிக்கப்படுவது உறுதியாகி இருக்கிறது.

Most Read Articles
English summary
Chrysler Group LLC, now owned by Italian carmaker Fiat SpA, has announced an agreement with Chinese carmaker Guangzhou Automobile Group. According to this agreement Chrysler's Jeep brand of SUVs will be built in China.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X