Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

ரூ.4 லட்சத்தில் புதிய காரை அறிமுகப்படுத்த ஃபோக்ஸ்வேகன் திட்டம்

Posted by:
Updated: Friday, January 18, 2013, 13:15 [IST]

இந்திய மார்க்கெட்டில் சாதிக்க சிறிய கார்தான் ஒரே ஆயுதம் என்று முடிவுக்கு வந்துவிட்டது ஃபோக்ஸ்வேகன். இதற்காக, ரூ.4 லட்சத்திற்குள் புதிய காரை அறிமுகப்படுத்த ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது.

2018ம் ஆண்டில் விற்பனையில் உலகின் நம்பர்-1 இடத்தை பிடிப்பதற்கான முயற்சிகளில் இதையும் ஒன்றாக ஃபோக்ஸ்வேகன் தற்போது சேர்த்துள்ளது. இந்தியா மட்டுமல்ல, சீனாவிலும் இந்த புதிய காரை விற்பனை செய்வதற்கு அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

is volkswagen planning low cost car for india

ஐரோப்பிய மார்க்கெட்டில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட அப் ஹேட்ச்பேக் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது ஃபோக்ஸ்வேகன். இந்த கார் இந்திய மண்ணிலும் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால், அந்த காரை ரூ.4 லட்சத்துக்குள் அறிமுகம் செய்ய இயலாது என்பதால்தான் இந்த மாற்று திட்டத்தை தீவிரமாக்கியிருக்கிறது ஃபோக்ஸ்வேகன்.

அடுத்த ஆண்டு டட்சன் பிராண்டில் குறைந்த விலை கார்களை நிசான் அறிமுகப்படுத்த இருக்கும் நிலையில், ஃபோக்ஸ்வேகனும் குறைந்த விலை காரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிய காருக்கு ஃபோக்ஸ்வேகனின் தரம், கட்டமைப்பு ஆகியவை கூடுதல் பலமாக இருக்கும். அடுத்த ஆண்டு பல புதிய சிறிய கார்கள் மார்க்கெட்டிற்கு வருவதால் போட்டி வெகுவாக அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.

Story first published:  Friday, January 18, 2013, 13:13 [IST]
English summary
Volkswagen, the German carmaker which is aiming to become the world''s largest carmaker by 2018 has taken the best available option to achieve its target. Volkswagen is reportedly developing a new low cost car that will be sold in China. This new low cost car will be placed below the Up, which was previously believed to be the car made for emerging markets like India.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Auto Talk Forum