ரூ.1000 கோடியுடன் ஆந்திராவில் லேண்ட் ஆன இசூஸு!

இந்தியாவில் தனது வர்த்தக திட்டங்களை உறுதிப்படுத்தியிருக்கிறது ஜப்பானிய நிறுவனமான இசூஸு. புதிய எஸ்யூவி மாடல்களை அறிமுகப்படுத்த இருக்கும் அந்த நிறுவனம் ஆந்திராவில் புதிய கார் ஆலையை அமைக்க இருக்கிறது.

ஆண்டுக்கு 50,000 கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இந்த புதிய ஆலைக்காக ரூ.1,000 கோடியை முதலீடு செய்ய உள்ளது. 2015ம் ஆண்டில் இந்த புதிய ஆலையில் கார் உற்பத்தி துவங்கும்.

மார்ச் 15ந் தேதி இதற்கான முறைப்படி அறிவிப்பை இசூஸு வெளியிட இருக்கிறது. இந்த புதிய கார் ஆலை தமிழக-ஆந்திர எல்லையில் சென்னைக்கு அருகாமையில் அமைய இருக்கிறது.

எனவே, சென்னை துறைமுகம் வழியாக பிற நாடுகளுக்கு எஸ்யூவி மாடல்களை ஏற்றுமதி செய்யும் நோக்கத்துடன் இந்த ஆலையை இசூஸு அமைக்க திட்டமிட்டிருப்பது உறுதியாகியிருக்கிறது.

அதேவேளை, புதிய ஆலையில் உற்பத்தி துவங்க இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் ஆகும் என்ற போதிலும், தற்சமயம் சென்னையிலுள்ள ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் ஆலையில் கார் அசெம்பிளிங் பணிகளை மேற்கொள்ள அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

எனவே, இசூஸு பிரிமியம் எஸ்யூவிகள் விரைவில் அறிமுகமாக உள்ளன. முதல் மாடலாக எம்யூ-7 எஸ்யூவி வரும் என தெரிகிறது. இது டொயோட்டா பார்ச்சூனருக்கு போட்டியாக இருக்கும்.

இசூஸு பிராண்டு மார்க்கெட்டுக்கு புதிது என்றாலும், அந்த நிறுவனத்தின் எஞ்சின்கள் அம்பாசடர் மற்றும் கான்டெஸ்ஸா கார்களில் பயன்படுத்தப்பட்டது நினைவிருக்கலாம். இசூஸுவிடம் கைவசம் உள்ள எஸ்யூவி, பிக்கப் டிரக் மாடல்களை ஸ்லைடரில் காணலாம்.

எம்யூ7 எஸ்யூவி

எம்யூ7 எஸ்யூவி

எம்யூ7 எஸ்யூவி

எம்யூ7 எஸ்யூவி

எம்யூ7 எஸ்யூவி

எம்யூ7 எஸ்யூவி

இசூஸு எம்யூ7 இன்டிரியர்

இசூஸு எம்யூ7 இன்டிரியர்

எம்யூ7 எஸ்யூவி

எம்யூ7 எஸ்யூவி

சோதனை ஓட்டம்

சோதனை ஓட்டம்

இந்தியாவில் எம்யூ7 சோதனை செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட படம்

சோதனை ஓட்டம்

சோதனை ஓட்டம்

இந்தியாவில் எம்யூ7 சோதனை நடத்தப்பட்டபோது எடுக்கப்பட்ட படம்

அசென்டர்

அசென்டர்

ரோடியோ

ரோடியோ

ரோடியோ பிக்கப் டிரக்

ரோடியோ பிக்கப் டிரக்

Most Read Articles
மேலும்... #isuzu #four wheeler #இசூஸு
English summary
Isuzu, the Japanese utility vehicle manufacturer has confirmed its plans to enter India by revealing that it will be building its manufacturing plant in Andhra Pradesh. Isuzu's Indian plant will be located in Sri City where the company will be investing as much as INR 1,000 crores.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X