கார் வாங்கும்போது... வட இந்தியர்கள் Vs தென் இந்தியர்கள்!!

By Saravana

இந்தியர்கள் கார் வாங்கும்போது முடிவு எடுக்கும் விதம், தேர்வு விதம் குறித்து ஜேடி பவர் ஆய்வு நிறுவனம் சமீபத்தில் ஒரு ஆய்வை நடத்தியது. அதில், நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் வாடிக்கையாளர்களின் தேர்வு முறை குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

வட இந்தியர்கள் தேர்வு செய்யும்போது கையாளும் நடைமுறைகள் மற்றும் தென் இந்தியர்கள் காரை தேர்வு செய்யும்போது கையாளும் நடைமுறைகள், விருப்பங்கள் குறித்த பல தகவல்கள் இதில் தெரிய வந்துள்ளன. அவை பற்றிய சுவையான விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

 புதிய காருக்கு முன்னுரிமை

புதிய காருக்கு முன்னுரிமை

முதன்முறையாக புதிய கார் வாங்குவதில் மேற்கத்திய பகுதியினர் முன்னிலை வகிக்கின்றனர். இதிலிருந்து, அந்த பகுதி பொருளாதார ரீதியிலும் செழுமையாக இருப்பதாக ஜேடி பவர் ஆய்வு தெரிவிக்கிறது. ஏனெனில், கார் வாங்கும் போக்கை வைத்தே ஒரு பகுதி அல்லது நாட்டின் பொருளாதாரத்தை கணித்து விட முடியும் என்கிறது பொருளாதார நிபுணர்களின் கூற்று.

ஸ்டைல் முக்கியம்

ஸ்டைல் முக்கியம்

வட இந்தியர்கள் அழகான டிசைனுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனராம். மேலும், அதிக தூரம் ஓட்டுவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் இந்தியர்கள்

தென் இந்தியர்கள்

அதிக எரிபொருள் சிக்கனம் கொண்ட கார்களுக்கே தென் இந்தியர்கள் மற்றும் கிழக்குப் பகுதியினர் அதிக முக்கியத்துவம் தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தென் இந்திய வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் அதிக தூரம் காரை ஓட்டுவது புலனாகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

 முடிவு எடுப்பது?

முடிவு எடுப்பது?

வட இந்தியர்கள் பெரும்பாலும் நண்பர்கள், உறவினர்களின் ஆலோசனை வழியாக கார்களை பற்றிய விபரங்களை அறிந்து கொண்டு கார் வாங்குவதை முடிவு செய்கின்றனர். ஆனால், தென் இந்தியர்கள் பெரும்பாலும் ஆன்லைன் வழியாக கார் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள முற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைனில் டெஸ்ட் டிரைவ், இன்ஸ்யூரன்ஸ் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் இருந்த இடத்திலேயே அலசி ஆராய்ந்து முடிவு எடுக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பல கார்கள்

பல கார்கள்

ஒரே வீட்டில் பல கார்கள் வைத்திருப்பது வட இந்தியாவில்தான் அதிகமாகம். மேற்கு மற்றும் தென் இந்திய பகுதிகளைவிட ஒரு வீட்டிற்கு 1.6 கார்கள் என்ற விகிதத்தில் வட இந்திய வாடிக்கையாளர்களிடம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தஸ்துக்கு முக்கியத்துவம்

அந்தஸ்துக்கு முக்கியத்துவம்

வட இந்தியர்கள் பலர் அந்தஸ்துக்கு முக்கியத்துவம் தருவதால் உருவத்தில் மெகா சைஸ் கார்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவதாக ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வட இந்தியாவில் சிறிய கார்கள் மீதான ஈர்ப்பு வெகுவாக குறைந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், குரோம் பூச்சு போன்ற அலங்கார வேலைப்பாடுகளுக்கும் வட இந்தியர்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எது எப்படியோ?

எது எப்படியோ?

எது எப்படியோ, பரந்துபட்ட நம் நாட்டில் வாடிக்கையாளர்களின் ரசனைகள், எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்கு கார் தயாரிப்பாளர்களுக்கு இந்த ஆய்வு உதவிகரமாக இருக்கும்.

Most Read Articles
Story first published: Tuesday, October 15, 2013, 13:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X