Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

இந்தியா வரும் புதிய ஜாகுவார் லேண்ட்ரோவர் கார்கள்!

Written by:
Published: Thursday, January 17, 2013, 15:39 [IST]

Jaguar Land Rover Launch New Models Soon

இந்தியாவில் இரண்டு புதிய கார் மாடல்களை இந்த ஆண்டு ஜாகுவார் லேண்ட் ரோவர் அறிமுகம் செய்ய இருக்கிறது.

டாடா மோட்டார்ஸ் அங்கமாக செயல்படும் ஜாகுவார் லேண்ட்ரோவர் இந்திய பிரிமியம் கார் மார்க்கெட்டில் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனமாகியுள்ளது.

2011ல் மொத்தம் 1813 கார்களை விற்பனை செய்திருந்த ஜாகுவார் லேண்ட்ரோவர் கடந்த ஆண்டு 2393 கார்களை விற்பனை செய்துள்ளது. இந்த வளர்ச்சியை தக்க வைக்கும் விதமாக புதிய மாடல்களை இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

உலகம் முழுவம்து பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் புதிய எஃப் டைப் காரை இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்ய உள்ளது ஜாகுவார். மேலும், மேம்படுத்தப்பட்ட எக்ஸ்எஃப் மற்றும் எக்ஸ்ஜே கார் மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது.

இதேபோன்று, லேண்ட்ரோவர் பிராண்டிலும் புதிய மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளது ஜாகுவார் லேண்ட்ரோவர். இந்த புதிய மாடல்கள் மூலம் விற்பனை மேலும் ஏற்றம் பெறும் என ஜாகுவார் லேண்ட்ரோவரின் இந்தியப் பிரிவு துணைத் தலைவர் ரோஹித் சூரி நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தியாவில் தற்போது ஜாகுவார் பிராண்டில் எக்ஸ்எஃப், எக்ஸ்எஃப்ஆர், எக்ஸ்கேஆர்-எஸ் மற்றும் எக்ஸ்ஜே கார் மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இதேபோன்று, லேண்ட்ரோவர் பிராண்டில் ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட், ரேஞ்ச்ரோவர் எவோக், டிஸ்கவரி-4, நியூ ரேஞ்ச்ரோவர் மற்றும் ப்ரீலேண்டர்-2 ஆகிய கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதில், ஃப்ரீலேண்டர்-2 எஸ்யூவி இந்தியாவிலேயே அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்படுகிறது.

கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil