பிராங்ஃபர்ட் ஆட்டோ ஷோவில் ஜாகுவார் முதல் எஸ்யூவி அறிமுகம்!

பிரிமியம் செடான் மற்றும் ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பில் புகழ்பெற்ற ஜாகுவார் நிறுவனம் எஸ்யூவி தயாரிப்பிலும் இறங்குவதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதனால், ஜாகுவார் எஸ்யூவியின் டிசைன் மற்றும் வசதிகள் குறித்து ஆவலைத் தூண்டியது.

இந்த நிலையில், அடுத்த மாதம் பிராங்பர்ட் மோட்டார் ஷோவில் இந்த புதிய எஸ்யூவியின் கான்செப்ட் மாடலை ஜாகுவார் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிளாட்பார்ம்

பிளாட்பார்ம்

பிளாட்பார்ம் ஜாகுவார் எக்ஸ்ஜே காரின் பிளாட்பார்மில் இந்த புதிய கிராஸ்ஓவர் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

 காப்புரிமை

காப்புரிமை

க்யூ டைப் மற்றும் எக்ஸ்க்யூ டைப் ஆகிய பெயர்களில் இந்த எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இந்த இரண்டு பெயர்களுக்கும் ஜாகுவார் காப்புரிமை பெற்றுள்ளது.

புதிய எஞ்சின்

புதிய எஞ்சின்

ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனங்கள் உருவாக்கி வரும் புத்தம் புதிய 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் இந்த கார்களில் பொருத்தப்பட உள்ளன. பெட்ரோல் மாடலில் 240 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இல்லையென்றால், லேண்ட்ரோவர் எவோக் கார்களில் பொருத்தப்பட்டிருக்கும் 2.2 லிட்டர் மற்றும் 3.0 லிட்டர் எஞ்சின்களை இந்த காரிலும் பொருத்தப்பட வாய்ப்பு உள்ளது.

லேண்ட்ரோவர் டிசைன்

லேண்ட்ரோவர் டிசைன்

லேண்ட்ரோவர் எஸ்யூவிகளின் தாக்கமும் இந்த எஸ்யூவியில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

ஆடி க்யூ5, பிஎம்டபிள்யூ எக்ஸ்5 மற்றும் தனது பங்காளியான லேண்ட்ரோவரின் எவோக் ஆகிய கார்களுக்கு இது போட்டியை கொடுக்கும்.

Most Read Articles
English summary
Premium car maker Jaguar is set to unveil a concept model SUV at the Frankfurt Motor Show. 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X