போர்ஷே சர்வதேச தலைவருக்கு கைது வாரண்ட்: ஜெய்ப்பூர் கோர்ட் பிறப்பித்தது

By Saravana
Porsche CEO
மோசடிப் புகாரின் அடிப்படையில் போர்ஷே நிறுவனத்தின் சர்வதேச தலைவர் மற்றும் போர்டு உறுப்பினர்கள் 8 பேருக்கு ஜெய்ப்பூர் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

8 ஆண்டுகளாக போர்ஷே நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இறக்குமதியாளராக பிரிசிஸன் கார் நிறுவனம் செயல்பட்டு வந்தது. கார் விற்பனை மற்றும் சர்வீஸ் வசதிகளுக்காக பெரும் முதலீட்டில் ஷோரூம் மற்றும் கட்டமைப்பு வசதிகளை பிரிசிஸன் ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரலில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் ஃபோர்ஷே நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இறக்குமதியாளராக நியமிக்கப்பட்டது. இதனால், பிரிசிஸன் கார் நிறுவனத்துக்கு பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

அதிகாரப்பூர்வ கார் இறக்குமதிக்கான ஒப்பந்தத்தை திடீரென ரத்து செய்து ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தை நியமித்து மோசடி செய்து விட்டதாக ஃபோர்ஷே நிறுவனத்தின் மீது ஜெய்ப்பூர் நீதிமன்றத்தில் பிரிசிஸன் கார் நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது.

மோசடி, பலாத்காரமாக பணம் பறித்தல், நம்பிக்கை துரோகம் உள்ளிட்ட பிரிவுகளில் போர்ஷே மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஜெய்ப்பூர் நீதிமன்றம் போர்ஷே நிறுவனத்தின் சர்வதேச தலைவர் மற்றும் சிஇஓ., மேத்தியாஸ் முல்லர் மற்றும் போர்டு உறுப்பினர்கள் 8 பேருக்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள அனைவரும் ஜெர்மனி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளில் இருப்பதால் இன்டர்போல் உதவியை போலீசார் நாடியுள்ளனர். இந்த விவகாரம் குறித்து போர்ஷே இந்தியா நிறுவனம் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது.

Most Read Articles
English summary
Jaipur court has issued arrest warrant against Matthias Mueller, the global CEO and chairman of Porsche AG.
Story first published: Saturday, January 12, 2013, 13:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X