காஷ்மீரில் அறிமுகமாகும் நானோ டாக்சி... ஆட்டோ கட்டணமத்தில் போகலாம்

By Saravana
Nano Taxi
நானோ காரை டாக்சியாக பயன்படுத்த அனுமதியளிக்க காஷ்மீர் அரசு முடிவு செய்துள்ளது. எனவே, அங்குள்ள சாலைகளை விரைவில் நானோ டாக்சிகள் அலங்கரிக்க உள்ளன.

உலகின் மிகக்குறைந்த விலை காரான நானோ அண்டை நாடான இலங்கையில் வாடகை காராக பயன்படுத்தப்பட்டு வருவது குறித்து ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில், நம் நாட்டில் முதன்முறையாக காஷ்மீர் மாநிலத்தில் நானோ டாக்சி அவதாரம் எடுக்க உள்ளது. ஆம், சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த ஸ்ரீநகர் மற்றும் ஜம்முவில் நானோ காரை டாக்சியாக பயன்படுத்த அனுமதி வேண்டி ஏராளமான தனியார் டிராவல்ஸ் நிறுவனங்கள் அம்மாநில அரசிடம் கோரிக்கை வைத்துள்ளன.

இந்த கோரிக்கை குறித்து காஷ்மீர் மாநில அரசு பரிசீலித்து வருகிறது. நானோவை வாடகை காராக பயன்படுத்துவதற்கு விரைவில் அனுமதியளிக்கவும் அம்மாநில முடிவு செய்திருப்பதை அதிகாரி ஒருவரும் உறுதி செய்துள்ளார்.

டாக்சியாக பயன்படுத்தப்படும் நானோ காரில் ஜிபிஎஸ் சிஸ்டம், ஏசி உள்ளிட்ட வசதிகள் இருக்கும். அதேவேளை, ஆட்டோ ரிக்ஷா கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நானோ டாக்சிக்கான பிரத்யேக விதிமுறைகளை வெளியிடவும் அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

கருப்பு, சிவப்பு, வெள்ளை ஆகிய நிறங்களில் நானோ காரை டாக்சியாக பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட உள்ளது. மேலும், ஆட்டோ ஸ்டான்ட் போன்று நானோ டாக்சிக்காக புதிய பார்க்கிங் பகுதிகளை ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
English summary
The Tata Nano will soon be a taxi in India if the Jammu and Kashmir state government will agree to the request of some private operators. Jammu and Kashmir will become the first Indian state to make use of the Nano as a taxi once the necessary approvals are available.
Story first published: Thursday, January 17, 2013, 12:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X