1,000 சீனர்களை பணியமர்த்தும் டாடாவின் ஜாகுவார் லேண்ட்ரோவர்

By Saravana

சீனாவில் அமைக்கப்படும் புதிய ஜாகுவார் லேண்ட்ரோவர் கார் ஆலைக்கு 1,000 பணியாளர்களை டாடா மோட்டார்ஸ் நியமிக்க உள்ளது.

சீனாவின் ஷாங்காய் நகருக்கு அருகில் சங்சூ என்ற இடத்தில் ஜாகுவார் லேண்ட்ரோவருக்கு மிகப்பெரிய கார் ஆலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

Rangerove Evoque

1 பில்லியன் பவுன்ட் முதலீட்டில் அமைக்கப்பட்டு வரும் இந்த புதிய ஆலைக்காக உள்நாட்டு பணியாளர்களை நியமிக்க டாடா மோட்டார்ஸ் கீழ் செயல்படும் ஜாகுவார் லேண்ட்ரோவர் திட்டமிட்டுள்ளது.

முதல்கட்டமாக, 50 சீனர்களுக்கு இங்கிலாந்தில் உள்ள ஜாகுவார் லேண்ட்ரோவர் கார் ஆலையில் தற்போது பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த மாத இறுதியில் இந்த 50 பேர் கொண்ட குழுவினர் நாடு திரும்ப உள்ளனர். இந்த குழுவினர் சீனாவில் தேர்வு செய்யப்பட்டு வரும் 950 புதிய தொழிலாளர்களுக்கு தங்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சியை அவர்களுக்கு வழங்க உள்ளனர்.

மேலும், சீனாவில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் கார் ஆலையில் முதலாவதாக ரேஞ்ச்ரோவர் எவோக் எஸ்யூவி உற்பத்தி செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாடா தலைமையின் கீழ் வந்ததன் பின்னர் இங்கிலாந்து நாட்டின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர்களில் ஒருவராக ஜாகுவார் லேண்ட்ரோவர் மாறியுள்ளது.

இதுதவிர, கடந்த 3 ஆண்டுகளில் 11,000 புதிய பணியாளர்களையும் நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Story first published: Monday, October 21, 2013, 9:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X