ராணி இரண்டாம் எலிசபெத்துக்காக கஸ்டமைஸ் செய்யப்பட்ட மேபேக் கார்!

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசெபத் பட்டம் சூட்டப்பட்டு நாளையுடன் 60 ஆண்டுகள் நிறைவடைகிறது. இது வைரவிழா என்பதால் இங்கிலாந்து மக்கள் கோலாகலமாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர். இதற்காக, அந்நாட்டின் பல்வேறு இடங்களில் ஏராளமான விழாக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ராணியின் பட்டம் சூட்டப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் வகையில், ஸ்பெஷல் எடிசன் மேபேக் ஆடம்பர கார் ஒன்றை இங்கிலாந்தை சேர்ந்த அப்சல் கான் டிசைன் நிறுவனம் வடிவமைத்துள்ளது. ராணி எலிசபெத்துக்காக லண்டனில் நடைபெற இருக்கும் பல்வேறு விழாக்களில் இந்த கார் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.

இரட்டை வண்ணம்

இரட்டை வண்ணம்

வெளிப்புறத்தில் சில்வர் மற்றும் மேட் கிரே கலர்களில் இரட்டை வர்ண பூச்சு கொடுக்கப்பட்டுள்ளது.

அலாய் வீல்

அலாய் வீல்

வெளிப்புறத்தில் அதிக மாற்றங்களை அப்சல் கான் டிசைன் நிறுவனம் செய்யவில்லை. ஆனால், 22 இஞ்ச் ஆர்எஸ்- எக்ஸ்எஃப் அலாய் வீல்களை பொருத்தி இந்த ஆடம்பர காரின் அழகை கூட்டியுள்ளது. இன்டிரியரிலும் சிறிய அளவில் தனது கைவண்ணத்தை அப்சல் கான் டிசைன் நிறுவனம் காட்டியுள்ளது.

ஸ்பெஷல் நம்பர் பிளேட்

ஸ்பெஷல் நம்பர் பிளேட்

இந்த காரில் 4 எச்ஆர்எச் என்ற பிரத்யேகமான நம்பர் பிளேட் பொருத்தப்பட்டுள்ளது. இந்த நம்பர் பிளேட் காரின் விலையைவிட கூடுதலாக இருக்கும் என கூறப்படுகிறது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த ஸ்பெஷல் மேபேக் 57எஸ் காரில் 6.0 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 604 எச்பி சக்தியை வாரி இறைக்கும் வல்லமை கொண்டது இந்த எஞ்சின்.

மேபேக் காருக்கு பிரியாவிடை

மேபேக் காருக்கு பிரியாவிடை

ராணி எலிசபெத்துக்காக மட்டுமின்றி உற்பத்தி நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட மேபேக் காருக்கு மரியாதை செய்யும் விதத்திலும் இந்த காரை அப்சல் கான் டிசைன் நிறுவனம் கஸ்டமைஸ் செய்துள்ளதாக ஆட்டோமொபைல் வட்டாரங்கள் கூறுகின்றன.

ஏலம்

ஏலம்

பல்வேறு இடங்களில் நடைபெற உள்ள ராணி எலிசபெத் விழாவில் பார்வைக்கு வைக்கப்பட இருக்கும் இந்த கார் கொண்டாட்டங்கள் முடிந்த பின்னர் ஏலத்தில் விட அப்சன் கான் டிசைன் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 இரண்டாம் எலிசபெத்

இரண்டாம் எலிசபெத்

ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு தற்போது 87 வயது ஆகிறது. இங்கிலாந்து மன்னராக இருந்து வந்த ஆறாம் ஜார்ஜ் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டதையடுத்து, அவரது மகள் எலிசபெத் இங்கிலாந்து அரசியாக அறிவிக்கப்பட்டார். 1953ல் உலகமே திரும்பி பார்க்கும் அளவுக்கு மிக பிரம்மாண்டமாக எலிசபெத் அரசியாக முடி சூடினார். அப்போது எலிசபெத்துக்கு வயது 26. பின்னர் லட்சக்கணக்கானோர் திரண்டிருந்த கூட்டத்துக்கு மத்தியில் ராணி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட அரியாசனத்தில் அமர வைக்கப்பட்டார்.

எக்கச்சக்க சொத்து

எக்கச்சக்க சொத்து

இங்கிலாந்து அரச குடும்பத்துக்கு ரூ.65,600 கோடி மதிப்புடைய சொத்துக்கள் இருக்கின்றன. அரண்மனைகள் தவிர பிற சொத்துக்களை அந்நாட்டு அரசு பராமரித்து வருகிறது. மேலும், அரண்மனை பராமரிப்பு மற்றும் அரச குடும்பத்தினரின் செலவுக்காக ராஜ குடும்பத்தின் சொத்துக்களிலிருந்து வரும் வருவாயின் லாபத்திலிருந்து 15 சதவீதத்தை ஆண்டுதோறும் ராணியின் சம்பளமாக அந்நாட்டு அரசு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு ரூ.296 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.

Most Read Articles
English summary
England is celebrating 60 years of Queen Elizabeth II's accession to the throne. U.K based auto tuning house A. Kahn Design is no exception. The tuning house has released a one-off custom Maybach 57S for the Queen. The custom Maybach will be on display across London during various events to mark the 60th anniversary celebrations.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X