படு அசத்தலான 2 புதிய கவாஸாகி சூப்பர் பைக்குகள் அறிமுகம்!

நின்ஜா ஸீஎக்ஸ் 10ஆர் மற்றும் நின்ஜா ஸீஎக்ஸ் 14ஆர் ஆகிய இரண்டு புதிய சூப்பர் பைக்குகளை இந்திய மார்க்கெட்டில் இன்று விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது கவாஸாகி.

படு அசத்தலாக இருக்கும் இந்த சூப்பர் பைக்குகள் பஜாஜ் ஆட்டோவின் புரொபைக்கிங் ஷோரூம் வழியாக விற்பனை செய்யப்படாது. இந்தியாவில் 1,000சிசி திறனும் மேலான பைக்குகளை தனது சொந்த டீலர்ஷிப் மூலம் விற்பனை செய்ய இருப்பதாக கவாஸாகி தெரிவித்துள்ளது.

ஸீஎக்ஸ் 14ஆர்

ஸீஎக்ஸ் 14ஆர்

ஸீஎக்ஸ் 12ஆர் பைக்குக்கு மாற்றாக வந்த இந்த ஸீஎக்ஸ் 14ஆர் பெர்ஃபார்மென்ஸ் டூரர் ரகத்தை சேர்ந்தது.

 எஞ்சின்

எஞ்சின்

இந்த பைக்கில் 195 பிஎச்பி ஆற்றலையும், 155என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.

உந்துசக்தி

உந்துசக்தி

0- 100 கிமீ வேகத்தை வெறும் 2.9 நொடிகளிலும், 0- 200 கிமீ வேகத்தை 7.6 வினாடிகளிலும் கடந்து விடும் ஆற்றல் படைத்தது.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

மணிக்கு 299 கிமீ வேகத்தை மிகாத வகையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதற்கான அம்சங்களுடன் கட்டமைப்பை பெற்றுள்ளது.

 டிராக்ஷன் கன்ட்ரோல்

டிராக்ஷன் கன்ட்ரோல்

இந்த சூப்பர் பைக்கில் வேகத்துக்கு தகுந்தவாறு மாறும் 3 விதமான நிலைகள் கொண்ட டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் இருக்கிறது.

விலை

விலை

ஸீஎக்ஸ் 14ஆர் பைக் ரூ.16.90 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

 ஸீஎக்ஸ் 10ஆர்

ஸீஎக்ஸ் 10ஆர்

1000 சிசி ரகத்தில் போட்டி போட வந்திருக்கும் புதிய சூப்பர் பைக் இது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த பைக்கில் 194 பிஎச்பி ஆற்றலையும், 112 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் 999சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

உந்துசக்தி

உந்துசக்தி

0 - 100 கிமீ வேகத்தை வெறும் 2.8 வினாடிகளில் தொட்டுவிடும்.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

மணிக்கு 299 கிமீ வேகத்தை மிகாத விதத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அம்சங்கள்

அம்சங்கள்

இந்த பைக்கில் கவாஸாகியின் பிரத்யேக ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. எல்இடி டாக்கோமீட்டர், 17 லிட்டர் பெட்ரோல் டேங்க் ஆகியவற்றை கூடுதல் அம்சங்களாக கூறலாம்.

Most Read Articles
English summary
Japanese bike maker Kawasaki has announced the launch of two superbikes in India, the Ninja ZX-10R and Ninja ZX-14R.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X