வீல் சேரில் செல்லும் மாற்றுத் திறனாளிகளுக்கான புதிய கார்

வீல் சேரில் அமர்ந்து செல்லும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவர்கள் வெளியில் சென்று வருவதற்கு அடுத்தவர்களின் உதவியை எதிர்பார்த்து இருக்க வேண்டியிருக்கிறது. இந்த குறையை போக்கும் விதமாக புதிய எலக்ட்ரிக் கார் ஒன்றை இங்கிலாந்து நிபுணர்கள் உருவாக்கியிருக்கின்றனர். கெங்கரு என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த எலக்ட்ரிக் கார் வீல் சேரில் அமர்ந்து கொண்டே கார் ஓட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

வீல் சேருடன் எளிதாக காருக்குள் ஏறி இறங்கும் வகையில் வசதிகளை கொண்டிருக்கிறது. அடுத்தவர்களின் உதவியின்றி மாற்றுத் திறனாளிகள் வெளியில் சென்று வர உதவும் இந்த புதிய எலக்ட்ரிக் கார் விரைவில் இங்கிலாந்தில் விற்பனைக்கு வர இருக்கிறது. கூடுதல் தகவல்களை படங்களுடன் ஸ்லைடரில் காணலாம்.

எலக்ட்ரிக் கார்

எலக்ட்ரிக் கார்

சுற்றுச்சூழலுக்கு குந்தகம் விளைவிக்காத வகையில் இந்த கார் பேட்டரியில் இயங்கும்.

நோ ஸ்டீயரிங்

நோ ஸ்டீயரிங்

எளிதாக இந்த காரை ஓட்டும் வகையில் மோட்டார்சைக்கிள் போன்ற ஹேண்டில்பார் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஜாய் ஸ்டிக் மூலம் இயக்கும் வேரியண்ட்டிலும் கிடைக்கிறது.

 நேரடியாக ஏறலாம்

நேரடியாக ஏறலாம்

சிறிய மேடை அல்லது நடைமேடையிலிருந்து வீல் சேரில் அமர்ந்தவாறே பின்புறமாக காருக்குள் சென்றுவிடலாம்.

 வசதிகள்

வசதிகள்

ரிமோட் கன்ட்ரோல் சாவியில் இருக்கும் பொத்தானை அழுத்தினால் பின்புற கதவு திறந்து கொள்ளும். உள்ளே சென்றவுடன் ஹேண்டில்பாரில் இருக்கும் பொத்தானை அழுத்தினால் பின்புற கதவு மூடிக் கொள்ளும்.

பாதுகாப்பு

பாதுகாப்பு

காருக்குள் ஏறி சரியாக வீல் சேரை நிறுத்தினால் மட்டுமே கார் ஸ்டார்ட் ஆகும். இதேபோன்று, கதவு சரியாக மூடாவிட்டாலும் கார் ஸ்டார்ட் ஆகாது.

எவ்வளவு தூரம் செல்லலாம்?

எவ்வளவு தூரம் செல்லலாம்?

ஒரு முறை சார்ஜ் செய்தால் 70 கிமீ தூரம் முதல் 110 கிமீ வரை செல்லலாம். மணிக்கு அதிகபட்சமாக 45 கிமீ வேகத்தில் செல்லும்.

 டூ வீலர் லைசென்ஸ் போதும்

டூ வீலர் லைசென்ஸ் போதும்

ஸ்கூட்டர்அளவுக்கு மட்டுமே எடை கொண்டிருப்பதால் இங்கிலாந்தில் இந்த கார் ஸ்கூட்டர் ரகத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது. எனவே, இந்த காரை ஓட்டுவதற்கு அங்கு இருசக்கர வாகன ஓட்டுனர் உரிமம் இருந்தால் போதுமானது.

ஹங்கேரி மூளை

ஹங்கேரி மூளை

இந்த காரை ஹங்கேரி நாட்டை சேர்ந்த கெங்கரு நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்த கார் தற்போது இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஃபைபர் கிளாஸ் பாடி

ஃபைபர் கிளாஸ் பாடி

இந்த கார் ஃபைபர் கிளாஸ் கொண்டி வடிவமைக்கப்படிருப்பதால் அதிக உறுதித்தன்மை கொண்டதோடு, மிக மிக எடை குறைவானதும் கூட.

விலை

விலை

இந்த கார் அமெரிக்காவில் 25,000 டாலரில் அறிமுகம் செய்யப்பட்டது. அரசு வழங்கும் ஊக்கத் தொகை சலுகைகளால் விலையில் தள்ளுபடி கிடைக்கிறது.

Most Read Articles
English summary
If a disabled person using a wheel chair wants to travel a longer distance, he or she will have to depend upon another person. Wheel chair bound people are mostly restricted to the back seat of a car. But, here is a vehicle that will provide such people an opportunity to drive. An electric vehicle, named as the Kengaru has been designed specifically to suit the needs of of people using wheel chairs.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X