கியா மோட்டார்ஸ் விளம்பரத்தில் ரஜினி ஸ்டைல் காட்டும் வெள்ளெலி!

By Saravana

ஹூண்டாய் மோட்டார்ஸ் அங்கமான கியா மோட்டார்ஸ் நிறுவனம் சோல் என்ற பெயரில் டால் பாய் டிசைன் கொண்ட கிராஸ்ஓவர் காரை விற்பனை செய்து வருகிறது. இந்த காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் பிராங்க்ஃபர்ட் ஆட்டோ ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.

இந்த நிலையில், சோல் காருக்காக புதிய விளம்பரத்தை கியா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ளது. அந்த விளம்பரத்தில் புதிய சோல் மேம்படுத்தப்பட்டதை சித்தரிக்கும் வகையில் வெள்ளெலிகளை வைத்து விளம்பரம் எடுக்கப்பட்டுள்ளது. அதில், கடைசியில் வரும் வெள்ளெலி ஒன்று ரஜினி ஸ்டைலில் வருவது போன்று இருக்கிறது. ஸ்லைடரின் கடைசியில் வீடியோ இணைப்பில் அதனை காணலாம்.

 முதன்முதலில்...

முதன்முதலில்...

கடந்த 2009ம் ஆண்டு முதல் வெள்ளெலிகளை வைத்து கியா மோட்டார்ஸ் விளம்பரங்களை வெளியிட்டு வருகிறது. வோடஃபோன் சூசூ போன்று இந்த விளம்பரங்களும் பெரும் வரவேற்பை பெற்றவை. அந்த வகையில், தற்போது சோல் காருக்காக புதிய வெள்ளெலி விளம்பரத்தை வெளியிட்டு இருக்கிறது. பிரபல பாடகி லேடி காகாவின் பின்னணி குரல் பின்னணியில் வருகிறது.

முழுதும் மாற்றம்

முழுதும் மாற்றம்

முழுவதும் மாற்றம் என்ற பெயரில் மேம்படுத்தப்பட்ட இந்த சோல் மாடலை கியா வெளியிடுகிறது. எஸ்யூவி தோற்றத்துடன் கவர்ச்சிகரமான வண்ணங்களில் புதிய சோல் கிடைக்கும்.

எஞ்சின்

எஞ்சின்

சோல் காரில் 1.6 லிட்டர் ஜிடிஐ பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்களுடன் வருகிறது. 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்கள் பொருத்தப்பட்டிருக்கும்.

இந்தியாவுக்கு கிடைக்குமா?

இந்தியாவுக்கு கிடைக்குமா?

டால் பாய் டிசைன் கொண்ட மாருதி வேகன் ஆர் காருக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதே போன்றே டால் பாய் டிசைன் கொண்ட சோல் காரை இந்தியாவில் ஹூண்டாய் விற்பனைக்கு கொண்டு வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

விளம்பர வீடியோ

அசத்தலான விளம்பரத்தின் வீடியோவை காணலாம்.

Most Read Articles
English summary
Kia, the South Korean automaker owned by Hyundai will launch a refreshed version of its Soul crossover for Europe next month. The Soul will be will be on display at the Frankfurt Auto Show.
Story first published: Tuesday, August 27, 2013, 13:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X