கேஎஸ்ஆர்டிசி வால்வோ பஸ்களில் 'கருப்பு பெட்டி'!

விபத்து உள்ளிட்ட அவசர காலங்களில் பயன்படும் வகையில் பஸ்களில் கருப்பு பெட்டியை பொருத்தி கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் சோதனை செய்து வருகிறது.

நாட்டின் சிறந்த அரசு போக்குவரத்து கழகங்களில் ஒன்றாக செயல்பட்டு வரும் கர்நாடக அரசு போக்குவரத்து கழக நிறுவனம் பஸ்களில் புதிய வசதிகளை அறிமுகம் செய்வதில் முன்னோடியாக இருந்து வருகிறது.

தற்போது பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் விதமாக விமானங்களில் இருப்பது போன்ற கருப்பு பெட்டி போன்று வசதிகளை தரும் கருவியை 4 வால்வோ பஸ்களில் பொருத்தியிருக்கிறது.

முதலில்....

முதலில்....

முதன்முதலாக வடமேற்கு மண்டல போக்குவரத்து கழகத்தில் இயக்கப்படும் 4 பஸ்களில் இந்த கருப்பு பெட்டி பொருத்தப்பட்டிருக்கிறது.

சென்னை பஸ்சிலும்...

சென்னை பஸ்சிலும்...

ஊப்ளியிலிருந்து சென்னை, போரிவெலி மற்றும் திருப்பதி செல்லும் வால்வோ பஸ்களில் இந்த கருப்பு பெட்டி பரீச்சார்த்த அடிப்படையில் பொருத்தப்பட்டிருக்கிறது.

கண்காணிப்பு

கண்காணிப்பு

பஸ்சின் வேகம், சென்றுகொண்டிருக்கும் இடம் ஆகியவற்றை ஜிபிஎஸ் வசதி மூலம் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்க முடியும்.

விபத்து

விபத்து

ஒருவேளை, விபத்து நிகழ்ந்தால் காரணம் குறித்து எளிதாக அறிந்து கொள்ளும் வகையில், வீடியோ கேமராவும், வாய்ஸ் ரெக்கார்டர் கருவியும் பொருத்தப்பட்டிருக்கிறது. டிரைவர் தெரிவிக்கும் தகவல்கள் இந்த கருவியில் பதிவாகிவிடும்.

ஒப்பந்தம்

ஒப்பந்தம்

பெங்களூரை சேர்ந்த பாதுரு மீடியோ டெக் என்ற மென்பொருள் நிறுவனம் இந்த கருவிக்கான மென்பொருளை வழங்க கர்நாடக அரசு போக்குவரத்து கழகத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.

சார்ஜ்

சார்ஜ்

ஒரு முறை சார்ஜ் செய்தால் இந்த கருவி 14 மணிநேரம் இயங்கும். பழுது அல்லது பிற அவசர நேரங்களில் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க முடியும் என்பதால் எளிதாக உதவி கிடைக்கும்.

Most Read Articles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X