Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

ஃபெராரி காரை ஓட்டி மனம் நொந்த லம்போர்கினி ஓனர்!

Posted by:
Updated: Monday, February 18, 2013, 12:24 [IST]

உலக அளவில் மிக பிரபலமான சூப்பர் கார் பிராண்டாக லம்போர்கினி திகழ்கிறது. காற்றியக்கவியலுக்கு ஏற்ற கூர்மையான டிசைன், அதற்கு ஏற்ப ஆற்றலை வாரி இறைக்கும் எஞ்சின் என லம்போர்கினி கார்கள் உலக அளவில் பெரும் எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களையும், கோடிக்கணக்கான ரசிகர்களையும் பெற்றுள்ளது.

ஆனால், லம்போர்கினி நிறுவனம் சூப்பர் காரை தயாரிக்க துவங்குவதற்கு காரணமே ஃபெராரிதான் என்றால் வியப்பாக இருக்கிறதா? ஆம், லம்போ நிறுவனம் சூப்பர் கார் தயாரிக்க ஃபெராரிதான் காரணம். இதுபோன்ற சுவாரஸ்யமான விஷயங்களுடன் லம்போர்கினி கார் நிறுவனத்தின் வரலாற்றிலிருந்து சில துளிகள்..

பெயர் காரணம்

லம்போர்கினியின் உரியமையாளர் ஃபெருஷியோ லம்போர்கினியின் பெயரில்தான் இந்த பிராண்டு உருவானது.

துவக்கம்

1963ல் லம்போர்கினி நிறுவனம் துவங்கப்பட்டது. முதலில் டிராக்டர்களைத்தான் லம்போர்கினி நிறுவனம் தயாரித்து வந்தது.

சூப்பர் கார் தயாரிப்பில் இறங்கியது எப்படி?

லம்போர்கினி டிராக்டர் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தபோது இதன் உரிமையாளர் ஃபெராரி காரை சொந்தமாக வைத்து ஓட்டி வந்தார். அப்போது, அந்த காரில் இருந்த கிளட்ச் பிரச்னையால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். அதுவே, அவர் சூப்பர் கார் தயாரிப்பில் இறங்குவதற்கும் காரணமாக இருந்தது.

லம்போர்கினியின் முதல் கார்

1963ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட 350ஜிடிவிதான் லம்போர்கினியின் முதல் தயாரிப்பு.

லம்போர்கினியின் அதிவேக கார்


லம்போர்கினியின் அதிவேக கார் மூர்சிலாகோ ஆர்-ஜிடி. மணிக்கு அதிபட்சம் 370 கிமீ வரை செல்லும் திறன் கொண்டது.

காஸ்ட்லி லம்போ

இதுவரை விற்பனையான லம்போர்கினி கார்களில் அதிக விலை கொண்டது லம்போ ரெவன்டன். 16 லட்சம் டாலர் விலையில் விற்பனையாகியது.

லம்போ கார்களின் பெயர்கள்

ஸ்பெயின் நாட்டின் பிரபலங்களின் பெயர்களை லம்போ தனது கார்களுக்கு சூட்டி வருகிறது.

அதிகபட்ச விற்பனை

2007ம் ஆண்டு லம்போர்கினி தனது வரலாற்றில் அதிகபட்சமாக 2,580 சூப்பர் கார்களை விற்பனை செய்தது.

லம்போர்கினி எஞ்சின்

லம்போர்கினியின் அனைத்து கார்களிலும் வி12 எஞ்சின்தான் பொருத்தப்பட்டிருக்கும். இதில், விதிவிலக்காக கல்லார்டோவில் வி10 எஞ்சின் பொருத்தப்பட்டது.

தற்போது ஃபோக்ஸ்வேகன் வசம்

தனி நிறுவனமாக செயல்பட்டு வந்த லம்போர்கினி தற்போது ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் கீழ் செயல்பட்டு வருகிறது.

Story first published:  Monday, February 18, 2013, 12:17 [IST]
English summary
There are several tit bits about Lamborghini that very few know. Drivespark wants to share some Lamborghini facts that you probably did not know. Flip through the photo feature below to read some interesting Lambo facts along with beautiful images of the cars that we all dream to ride.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil