இந்திய வயல்காடுகளை அலங்கரிக்க வரும் லம்போ சூப்பர் டிராக்டர்

கடந்த இரு மாதங்களுக்கு முன் சூப்பர் கார் தயாரிப்பில் புகழ்பெற்ற லம்போர்கினி நிறுவனம் நைட்ரோ என்ற புதிய தலைமுறை சூப்பர் டிராக்டரை அறிமுகம் செய்தது. இந்த டிராக்டர் குறித்த தகவல்களை அப்போதே டிரைவ்ஸ்பார்க் தளம் வெளியிட்டிருந்தது. வாசகர்களை மெய்சிலிர்க்க வைத்த இந்த டிராக்டர் தற்போது இந்தியா வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சேம் டச்-ஃபார்(எஸ்டிஎஃப்) நிறுவனம் இந்த டிராக்டர்களை இந்தியாவில் அறிமுகம் செய்யும் என்று தெரிகிறது. இந்த நிறுவனம் ராணிப்பேட்டையில் உள்ள தனது தொழிற்சாலையில் டிராக்டர்களை தயாரித்து வருகிறது. கடந்த ஆண்டு 6,000 கார்களை உற்பத்தி செய்துள்ளது. இதில், 800 லம்போர்கினி பிரிமியம் டிராக்டர்களும் அடங்கும். இவை மலேசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, கர்நாடகா, மஹாராஷ்டிரா, ஆந்திரா, மேற்கு உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 2,000 சாதாரண ரக டிராக்டர்களை விற்பனை செய்துள்ளது. இந்த நிலையில், இந்த நிறுவனம் லம்போர்கினி பிரிமியம் ரக டிராக்டர்களை இந்தியாவில் அறிமுகம் செய்வது குறித்து ஆய்வு செய்து வருகிறது. லம்போர்கினி பிரிமியம் ரக டிராக்டரின் சிறப்பம்சங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை காணலாம்.

டிசைன்

டிசைன்

அடுத்த தலைமுறை அம்சங்களுடன் இந்த டிராக்டரை லம்போ டிசைன் செய்திருக்கிறது. இத்தாலியை சேர்ந்த பிரபல டிசைனர் ஜியார்கெட்டோ ஜியுகியாரோ டிசைன் செய்துள்ளார்.

எல்இடி விளக்குகள்

எல்இடி விளக்குகள்

விலையுயர்ந்த கார்களில் இருப்பதுபோன்று இந்த டிராக்டரில் முகப்பிலும், பின்புறத்திலும் எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இரட்டை வண்ணக் கலவை கொண்டதாக பெயின்ட் செய்யப்பட்டுள்ளது.

உள் அலங்காரம்

உள் அலங்காரம்

சொகுசு கார்களைவிட ஆடம்பரமாக காட்சியளிக்கிறது இதன் இன்டிரியர். இந்த டிராக்டரில் 4 சிலிண்டர்கள் கொண்ட டெய்ட்ஸ் டயர் 4ஐ எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.

டிரான்ஸ்மிஷன்

டிரான்ஸ்மிஷன்

இந்த டிராக்டரில் 3 ஸ்பீடு பவர் ஷிப்ட் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கிறது.

டிஸ்க் பிரேக்குகள்

டிஸ்க் பிரேக்குகள்

இந்த டிராக்டரில் செர்வோ மோட்டார் துணையுடன் இயங்கும் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. டிராக்டரில் பிரேக் பிடிக்க பெடல் மீது ஏறி நின்று சாகசம் காட்ட வேண்டியிருக்காது.

பயன்பாடு

பயன்பாடு

பெரு நிலக்கிழார், கோல்ப் மைதானங்கள் மற்றும் கிரிக்கெட் ஸ்டேடியங்களில் பயன்படுத்தும் வசதிகளை இந்த டிராக்டர் கொண்டிருக்கும்.

போட்டியாளர்

போட்டியாளர்

கடந்த பிப்ரவரியில் ஃபெராரி நிறுவனம் டிராக்டரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்தது. இந்த வரிசையில் அடுத்து லம்போர்கினியும் தனது டிராக்டரை விற்பனைக்கு கொண்டு வரலாம் என தெரிகிறது.

விலை

விலை

ஐரோப்பாவில் இந்திய மதிப்பில் ரூ.10 லட்சம் விலையில் இந்த டிராக்டர் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் விற்பனைக்கு வரும்போது விலை இதைவிட கூடுதலாக இருக்கும்.

 இந்தியாவில் உற்பத்தி

இந்தியாவில் உற்பத்தி

இந்தியாவிலேயே இந்த டிராக்டரை அசெம்பிள் செய்வது குறித்து எஸ்டிஎஃப் நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது. இதன்மூலம் சவாலான விலையில் லம்போ டிராக்டரை விற்பனை செய்ய முடியும் என அந்த நிறுவனம் நம்புகிறது.

Most Read Articles
English summary
Super brand Lamborghini tractors may hit to Indian shores soon.Come 2014, Lamborghini tractors, known for their advanced technology and styling, maybe working farms in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X