லேண்ட்ரோவர் நம்பிக்கையை காப்பாற்றிய எலக்ட்ரிக் டிஃபென்டர்!

எலக்ட்ரிக் கார்கள் பொதுவாக பெர்ஃபார்மென்ஸ் விஷயத்தில் சிறப்பாக இல்லை என்ற முத்திரையை தகர்க்கும் விதமாக புதிய முயற்சியை லேண்ட்ரோவர் மேற்கொண்டது. அதாவது, தனது பழமையான மாடல்களில் ஒன்றான மாடலான டிஃபென்டர் எஸ்யூவியை எதிர்கால எலக்ட்ரிக் கார்களுக்கான ஆராய்ச்சி மாடலாக பயன்படுத்த உள்ளதாக ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.

இதன்படி, லேண்ட்ரோவர் நடத்திய சோதனைகளில் டிஃபென்டர் எஸ்யூவி வெற்றிகரமான முடிவுகளை தந்துள்ளது. இது லேண்ட்ரோவருக்கு பெரும் உற்சாகத்தையும், ஊக்கத்தையும் கொடுத்துள்ளது. இதன்மூலம், எதிர்காலத்தில் சிறந்த பெர்ஃபார்மென்ஸ் கொண்ட எலக்ட்ரிக் ஆஃப்ரோடு எஸ்யூவி தயாரிப்புக்கு புதிய அடித்தளம் கிடைத்துள்ளது.

மாற்று மாடல்

மாற்று மாடல்

1948ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த மாடல் நீண்ட பாரம்பரியத்தை கொண்ட எஸ்யூவி மாடலாக வலம் வருகிறது. இந்த நிலையில், டிஃபென்டருக்கு மாற்றாக டிசி100 என்ற புதிய தலைமுறை எஸ்யூவியை லேண்ட்ரோவர் அறிமுகம் செய்ய இருக்கிறது.

அடுத்த தலைமுறை நுட்பம்

அடுத்த தலைமுறை நுட்பம்

டிஃபென்டரின் உற்பத்திக்கு முற்றாக குட்பை சொல்லாமல் எதிர்கால எலக்ட்ரிக் எஸ்யூவிகளுக்கான ஆராய்ச்சி மாடலாக பயன்டுத்துகிறது லேண்ட்ரோவர்.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

இந்த எலக்ட்ரிக் கான்செப்ட் மாடல்கள் ஆஃப்ரோடு தகவமைப்புகளையும், அதிக ஆற்றல் கொண்டதாகவும் இருக்கும் என்பதோடு சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது என்பது முக்கிய அம்சமாக இருக்கும்.

பவர்

பவர்

இந்த எஸ்யூவியில் பொருத்தப்பட்டிருக்கும் எலக்ட்ரிக் மோட்டார் 94 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன்கொண்டதாக இருக்கும். இது கரடு முரடான சாலைநிலைகளில் கூட எளிதாக டிஃபென்டரை செலுத்தும்.

பேட்டரி

பேட்டரி

எலக்ட்ரிக் டிஃபென்டரில் 410 கிலோ எடை கொண்ட லித்தியம் அயான் பேட்டரி எஞ்சின் பே பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. அதிக ஆற்றல் வாய்ந்த இந்த பேட்டரியின் சக்தி மூலம் 80 கிமீ தூரம் வரை செல்ல முடியும்.

சார்ஜ் நேரம்

சார்ஜ் நேரம்

இந்த பேட்டரியை 2 விதமான சார்ஜர்கள் மூலம் சார்ஜ் செய்ய முடியும். 7 கிலோவாட் சார்ஜர் மூலம் 4 மணி நேரத்தில் இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய முடியும். 3 கிலோவாட் சார்ஜர் மூலம் இதன் பேட்டரி முழு சார்ஜ் ஆவதற்கு 10 மணி நேரம் பிடிக்கும்.

ஆற்றல் சேமிப்பு தொழில்நுட்பம்

ஆற்றல் சேமிப்பு தொழில்நுட்பம்

ஹில் டிசென்ட் கன்ட்ரோல் சிஸ்டம் மூலம் 30 கிலோவாட் அளவுக்கு உற்பத்தி செய்யப்பட்டு பேட்டரியில் சேமிக்கும் வகையிலான தொழில்நுட்பத்தை இந்த டிஃபென்டர் கொண்டிருக்கிறது.

டிரான்ஸ்மிஷன்

டிரான்ஸ்மிஷன்

இதில் பொருத்தப்பட்டிருக்கும் சிங்கிள் ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் டிஃபென்டருக்கு அதிகபட்ச டார்க்கை வழங்கும்.

பெர்ஃபார்மென்ஸ்

பெர்ஃபார்மென்ஸ்

நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த எலக்ட்ரிக் டிஃபென்டர் 800 மிமீ ஆழம் பதியும் சேறு நிறைந்த சாலைகளில் கூட 12 டன் டிரக்கை இழுத்துச் செல்லும் ஆற்றல் கொண்டது.

ரயிலை இழுத்த டிஃபென்டர்

ரயிலை இழுத்த டிஃபென்டர்

சோதனையில் ஒரு பகுதியாக தரையில் செல்லும் வகையிலான 4 பெட்டிகள் கொண்ட ரயில் ஒன்றையும் எலக்ட்ரிக் டிஃபென்டருடன் இணைத்து இழுக்க வைத்தனர். 60 பயணிகளுடன் 60 டன் கொண்ட அந்த ரயிலை மிக அனாயசமாக இழுத்து வியக்க வைத்திருக்கிறது டிஃபென்டர்.

நடமாடும் லேப்

நடமாடும் லேப்

இந்த புதிய தொழில்நுட்பத்திற்காக லேண்ட்ரோவர் நடமாடும் ஆய்வகத்தை அமைத்து சோதனைகளை நடத்தியிருக்கிறது. அனைத்து சாலைநிலைகளிலும் சிறப்பாக செல்லும் வகையிலான இந்த புதிய தொழில்நுட்பம் எதிர்கால லேண்ட்ரோவர் மாடல்களில் இடம்பெறும் என லேண்ட்ரோவர் ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையத்தின் தலைவர் ஆன்டனி ஹார்ப்பர் தெரிவித்துள்ளார்.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

மணிக்கு 112 கிமீ வேகம் வரை செல்லும். ஆனால், குறைந்த வேகத்தில் வைத்தே சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கும் பேட்டரி சார்ஜ் மூலம் 8 மணி நேரம் தொடர்ந்து இயக்கி பரிசோதித்து பார்க்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Back in February Land Rover revealed to the world, its first All Terrain Electric Research Vehicle, based on the Defender. The project's aim was to come up with a real world functional, highly capable, all wheel drive, off road electric vehicle for the future, which is as effective as the Defender.
Story first published: Monday, August 5, 2013, 9:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X