மினி எஸ்யூவியை வடிவமைக்கும் லேண்ட்ரோவர்?- ஆட்டோ உலகில் பரபரப்பு

மினி எஸ்யூவி கார்கள் மீதான மோகம் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, பல முன்னணி நிறுவனங்கள் காம்பெக்ட் ரக எஸ்யூவி கார்களை அறிமுகம் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்த வரிசையில், புகழ்பெற்ற ஆடம்பர எஸ்யூவி தயாரிப்பாளரான லேண்ட்ரோவர் நிறுவனமும் தற்போது இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 4 மீட்டருக்கும் குறைவான புத்தம் புதிய மினி எஸ்யூவியை அறிமுகம் செய்வதற்கு லேண்ட்ரோவர் ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆட்டோகார் இதழின் இங்கிலாந்து பதிப்பு இதுகுறித்த தகவலையும், மாதிரிப் படங்களையும் வெளியிட்டுள்ளது.

Land Rover Mini SUV

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது உருவாக்கி வரும் புதிய 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சினை இந்த புதிய மினி எஸ்யூவியில் பொருத்தப்படலாம் என தெரிகிறது. மேலும், 4 மீட்டருக்குள் உருவாக்கப்படும் இந்த மினி எஸ்யூவியின் அடிப்படையில் டாடா மோட்டார்ஸ் மற்றும் சீனாவின் செர்ரி கார் நிறுவனங்களும் புதிய மினி எஸ்யூவிகளை தயாரிக்கும் என அந்த தகவல் கூறுகிறது.

Most Read Articles
English summary
Iconic british car maker Land Rover is working on a new sub 4 meter mini SUV. Here are some renderings of the same.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X