மஹிந்திரா பொலிரோ - சில சுவாரஸ்ய தகவல்கள்

By Saravana

கடந்த பத்தாண்டுகளில் இந்திய கார் மார்க்கெட்டின் நிலைமை தலைகீழாகிவிட்டிருக்கிறது. இந்த நிலையில், விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு 13 ஆண்டுகள் ஆன நிலையிலும், பல்வேறு சவால்களை எதிர்கொண்டு மஹிந்திராவின் வெற்றிகரமான மாடலாக பொலிரோ திகழ்கிறது.

மேலும், சிறிய கார்கள் ஆதிக்கம் செலுத்தும் டாப் -10 பட்டியலில் தனக்கென நிலையான இடத்தை தொடர்ந்து தக்க வைத்து வருவதும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. விற்பனையில் பல புதிய மைல்கற்களை கடந்த நிலையில், 6.5 லட்சம் என்ற புதிய விற்பனை எண்ணிக்கையை கடந்துள்ளது பொலிரோ. முந்தைய நிதி ஆண்டில் மட்டும் 1,17,665 பொலிரோ எஸ்யூவிகளை மஹிந்திரா விற்பனை செய்துள்ளது. விற்பனையில் சக்கைபோடு போட்டு வரும் மஹிந்திரா பொலிரோவின் விற்பனை சாதனைகள் குறித்த சில சுவாரஸ்ய தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

நம்பர் -1

நம்பர் -1

2007ம் ஆண்டு முதல் எஸ்யூவி ரகத்தில் அதிக விற்பனையாகும் மாடல் என்ற பெருமையை பொலிரோ தொடர்ந்து தக்க வைத்து வருகிறது.

ஒரு லட்சம் சாதனை

ஒரு லட்சம் சாதனை

வெறும் இரண்டே ஆண்டுகளில் பொலிரோ விற்பனை ஒரு லட்சத்தை கடந்தது. நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட மாடல்களில் குறுகிய காலத்தில் இந்த விற்பனையை எட்டிய பெருமையும் பொலிரோவுக்கு உண்டு.

இப்போதும்...

இப்போதும்...

ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் விற்பனை பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. மேலும், டாப் -10 லிஸ்ட்டில் இடம்பெற்றிருக்கும் ஒரே எஸ்யூவி மாடலும் பொலிரோதான்.

வாடிக்கையாளர் திருப்தி

வாடிக்கையாளர் திருப்தி

டெய்லர் நீல்சன் என்ற பிரபல நிறுவனம் நடத்திய ஆய்வில் வாடிக்கையாளர் திருப்தியில் 2012ம் ஆண்டின் நம்பர் 1 எஸ்யூவி மாடலாக அறிவிக்கப்பட்டது.

அதிகாரி கருத்து

அதிகாரி கருத்து

மஹிந்திரா ஆட்டோமோட்டிவ் பிரிவு தலைமை அதிகாரி பிரவீன் ஷா கூறுகையில்," கடந்த 13 ஆண்டுகளாக எஸ்யூவி மார்க்கெட்டை பொலிரோ ஆட்சிமானம் செய்து வருவதற்கு இந்த விற்பனை எண்ணிக்கையும் முக்கிய அத்தாட்சி. வாடிக்கையாளர்களின் வாழ்க்கை முறை, தேவைகள், எதிர்பார்ப்பு ஆகியவற்றை கச்சிதமாக பூர்த்தி செய்யும் வகையில், அவ்வப்போது பொலிரோவில் மாற்றங்களை செய்து வருகிறோம். இதுவே பொலிரோவின் வலுவான அடித்தளத்துக்கு காரணமாக அமைந்துள்ளது," என்றார்.

பொலிரோ பத்தி ஏதாச்சும்...

பொலிரோ பத்தி ஏதாச்சும்...

எல்லாம் சரி, அந்த பொலிரோவில் என்னென்ன அம்சங்கள் இருக்கின்றன, அதன் விலை எவ்வளவு உள்ளிட்ட எல்லா விபரங்களும் தெரிந்து கொள்ள எல்லோருக்கும் ஆவல் ஏற்படுவது இயற்கையே. அப்படியென்றால், இங்கே கிளிக் செய்து உள்ளே வாருங்கள். உங்களுக்கான அனைத்து தகவல்களும் கிடைக்கும்.

Most Read Articles
English summary
Mahindra's position as India's largest SUV manufacturer is largely due to huge, still growing popularity of Bolero. This iconic SUV was launched in the year 2000, but has remained unchallenged even with the advent of modern SUVs from modern SUVs from international manufacturers.
Story first published: Saturday, November 2, 2013, 14:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X