மஹிந்திரா, செவர்லே கார் விலை உயர்வு!

By Saravana

ரூபாய் மதிப்பு சரிவு எதிரொலியால் கார் விலையை மஹிந்திரா, செவர்லே ஆகியவை உயர்த்தியிருக்கின்றன.

அனைத்து மாடல்களின் விலையையும் ரூ.6,000 வரை உயர்த்தியிருப்பதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது. இதேபோன்று, சமீபத்தில் மார்க்கெட்டுக்கு வந்த என்ஜாய் எம்பிவி காரின் விலையை செவர்லே ரூ.10,000 வரை உயர்த்தியிருக்கிறது.

Chevrolet Enjoy

மாருதி, ஹூண்டாய், டொயோட்டா, ஆடி, மெர்சிடிஸ் பென்ஸ் ஆகிய நிறுவனங்கள் விலை உயர்வு குறித்து பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளன.

கார் விற்பனை மோசமாக இருந்து வருவதால், மார்க்கெட்டில் சிறிது எழுச்சி ஏற்பட்டவுடன் கார் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளதாக மாருதி தெரிவித்துள்ளது.

இதே கருத்தை டொயோட்டாவும் தெரிவித்துள்ளது. கார் விற்பனையில் சரிவு இருப்பதால், விலை உயர்வை சிறிது தாமதப்படுத்தியிருப்பதாக அந்த நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குனர் சந்தீப் சிங் கூறியிருக்கிறார்.

Most Read Articles
English summary
Car manufacturers in India have started raising prices despite sluggish demand and negative sales, as rising input costs due to the falling rupee threaten margins. 
Story first published: Thursday, July 4, 2013, 9:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X