குறைந்த விலை மஹிந்திரா எக்ஸ்யூவி: விபரங்கள்!

கடந்த மத்திய பட்ஜெட்டில் 170மிமீ.,க்கும் மேல் கிரவுண்ட் கிளியரன்ஸ், 1500சிசிக்கு அதிகமான திறன் எஞ்சின் கொண்ட கார்களுக்கு 3 சதவீத கூடுதல் வரி விதிக்கப்பட்டது. இதன் எதிரொலியால் எஸ்யூவி ரக கார்களின் விலை கணிசமாக உயர்ந்தது.

இந்த வரி விதிப்பால் மஹிந்திராவின் தயாரிப்புகளுக்கு நேரடியாக பொருந்தியதால், விற்பனையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. வரி திரும்ப பெற மத்திய அரசு மறுத்துவிட்டதால், தற்போது மாற்று வழிகளை மஹிந்திரா செயல்படுத்த துவங்கியுள்ளது.

எக்ஸ்யூவி, ஸைலோ, ஸ்கார்ப்பியோ கார்களின் கிரவுண்ட் கிளியரன்சை குறைக்க முடிவு செய்துள்ளது. இதனமூலம், எக்ஸ்யூவி 500 விலை குறையும்.

நெருக்கடி

நெருக்கடி

டஸ்ட்டர், ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்ட புதிய எஸ்யூவி மாடல்களின் வரவால், எக்ஸ்யூவி 500 மற்றும் ஸ்கார்ப்பியோவின் விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நெருக்கடியை சமாளிக்க குறைந்த விலை எக்ஸ்யூவி மற்றும் ஸ்கார்ப்பியோ மாடல்களை அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாய நிலைக்கு மஹிந்திரா தள்ளப்பட்டுள்ளது.

 கிரவுன்ட் கிளியரன்ஸ்

கிரவுன்ட் கிளியரன்ஸ்

கூடுதல் வரியை தவிர்ப்பதற்காக 160மிமீ.,க்கும் குறைவான கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட மஹிந்திரா எக்ஸ்யூவி 500 அறிமுகப்படுத்த உள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் பவன் கோயங்கோ கூறியுள்ளார்.

எஞ்சின்

எஞ்சின்

எஞ்சின் குறித்து பவன் கோயங்கோ தகவல் எதையும் தெரிவிக்கவில்லை.

பிற மாற்றங்கள்

பிற மாற்றங்கள்

எக்ஸ்யூவியின் பிரேக், எலக்ட்ரானிக் சிஸ்டம், கிளட்ச் சிஸ்டத்திலும் மாற்றங்கள் செய்யப்பட உள்ளது.

விலை குறையும்

விலை குறையும்

புதிய மாற்றங்கள் மூலம் ரூ.27,000 முதல் ரூ.33,000 வரை குறைவான விலையில் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி 500 விற்பனைக்கு வர இருக்கிறது.

வடிவமைப்பு கொள்கை

வடிவமைப்பு கொள்கை

எதிர்வரும் காலங்களில் 170 மிமீ.,க்கும் குறைவான கிரவுன்ட் கிளியரன்ஸ் கொண்டதாக எஸ்யூவி வாகனங்களை தயாரிப்பதை நிரந்தர வடிவமைப்பு கொள்கையாக கடைபிடிப்பது குறித்து இதுவரை உறுதியான முடிவு எடுக்கவில்லை என மஹிந்திரா தெரிவித்துள்ளது.

ஸைலோ, ஸ்கார்ப்பியோ

ஸைலோ, ஸ்கார்ப்பியோ

எக்ஸ்யூவியை தொடர்ந்து ஸைலோ, ஸ்கார்ப்பியோவிலும் மாற்றங்களை செய்து விற்பனைக்கு கொண்டு வர மஹிந்திரா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Most Read Articles
English summary
Utility vehicle major Mahindra and Mahindra (M&M) is planning to introduce a cheaper entry level variant of the XUV 500 in Indian market soon.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X