குறைந்த விலையில் எக்ஸ்யூவியை களமிறக்கும் மஹிந்திரா

By Saravana

நடப்பு நிதி ஆண்டு முடிவில் குறைந்த விலை எக்ஸ்யூவி 500வை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு மஹிந்திரா முடிவு செய்திருக்கிறது.

ரெனோ டஸ்ட்டர் வரவால் மஹிந்திராவின் ஸ்கார்ப்பியோ மற்றும் எக்ஸ்யூவி 500 கார்களின் விற்பனையில் பலத்த அடி விழுந்திருக்கிறது. மேலும், கடந்த பட்ஜெட்டில் எஸ்யூவி கார்கள் மீதான வரி உயர்வும் மஹிந்திரா விற்பனையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை அந்த நிறுவனமே தெரிவித்துள்ளது.

Mahindra XUV 500

இந்த நிலையில், டஸ்ட்டர் மற்றும் வரி உயர்வால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளை சமாளித்து விற்பனையை உயர்த்துவதற்காக புதிய எக்ஸ்யூவி 500 வேரியண்ட்டை மஹிந்திரா அறிமுகப்படுத்த உள்ளது. பல வசதிகளை குறைத்து புதிய எக்ஸ்யூவி 500வை விற்பனைக்கு விடுவதற்கு மஹிந்திரா முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில், மற்றொரு சிறிய காரையும் மஹிந்திரா விற்பனைக்கு கொண்டு வர உள்ளது. மஹிந்திரா ஆட்டோமோட்டிவ் பிரிவு தலைவர் கோயங்கோ சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, வைப் காரின் பிளாட்பார்மில் வடிவமைக்கப்படும் புதிய சிறிய காரை அடுத்த 12 மாதங்களில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Most Read Articles
English summary
utility vehicle major Mahindra and Mahindra (M&M) is planning to introduce a cheaper entry level variant of the XUV 500 by the end of this fiscal.
Story first published: Wednesday, June 12, 2013, 15:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X