பவர்ஃபுல் எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தும் மஹிந்திரா ரேவா

By Saravana

சக்திவாய்ந்த எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்த மஹிந்திரா- ரேவா ஆயத்தமாகி வருகிறது. முதலாவதாக, பவர்ஃபுல் இ2ஓ காரை ஐரோப்பிய மார்க்கெட்டில் மஹிந்திரா ரேவா நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த கார் பிராங்க்ஃபர்ட் ஆட்டோ ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.

இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து புதிய மாடல்களையும் அறிமுகப்படுத்த அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுதவிர, உள்நாடு மற்றும் சர்வதேச மார்க்கெட்டுக்கு தகுந்தாற்போல் மிட் ரேஞ்ச் மற்றும் ஹை ரேஞ்ச் எலக்ட்ரிக் மோட்டார்களை மஹிந்திரா ரேவா எஞ்சினியர்கள் தற்போது வடிவமைத்து வருகின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவல்கள் ஸ்லைடரில் காணலாம்.

புதிய மின் மோட்டார்கள்

புதிய மின் மோட்டார்கள்

தற்போது நடுத்தர ரகத்தில் 50 kW முதல் 60 kW கேவி திறன் கொண்ட மின் மோட்டார்களையும், உயர் ரகத்தில் 80 kW திறன் கொண்ட மின் மோட்டார்களையும் வடிவமைக்கும் பணிகளில் மஹிந்திரா ரேவா எஞ்சினியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

பெட்ரோல் எஞ்சினுடன் போட்டி

பெட்ரோல் எஞ்சினுடன் போட்டி

நடுத்தர மின் மோட்டார்கள் 67 முதல் 81 பிஎச்பி ஆற்றல் வரையிலும், உயர் ரக மின் மோட்டார்கள் 107 பிஎச்பி சக்தியையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.

சாதாரண கார்களிலும்...

சாதாரண கார்களிலும்...

நடுத்தர மற்றும் உயர் ரக மின் மோட்டார்கள் மற்றும் டிரான்ஸ்மின்ஷன் அமைப்புகளுடன் கூடிய பல புதிய மாடல்களை மஹிந்திரா ரேவா அறிமுகம் செய்ய உள்ளது. இ2ஓ போன்று அல்லாமல் சாதாரண ஹேட்ச்பேக் மற்றும் செடான் கார்களிலும் பொருத்தும் விதத்தில் இந்த வடிவமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.

முதலில் வெரிட்டோ

முதலில் வெரிட்டோ

இந்த புதிய பவர்ஃபுல் மின் மோட்டார் மற்றும் டிரான்மிஷன் அமைப்புடன் முதலாவதாக எலக்ட்ரிக் வெரிட்டோ கார் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கார்கள் மட்டுமின்றி சிறிய வர்த்தக வாகனங்களிலும் இந்த சக்திவாய்ந்த மின் மோட்டார்களை பயன்படுத்த மஹிந்திரா ரேவா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இ2ஓ பவர் தெரியுமா?

இ2ஓ பவர் தெரியுமா?

இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் மஹிந்திரா ரேவா இ2ஓ எலக்ட்ரிக் கார் 19 kW திறன் கொண்டது.

இ2ஓ.,வுக்கு ஆஃபர்

இ2ஓ.,வுக்கு ஆஃபர்

மஹிந்திரா ரேவா நிறுவனம் நிர்ணயித்த விற்பனை எண்ணிக்கையை இ2ஓ பெறவில்லை. அரசிடமிருந்து எலக்ட்ரிக் கார்களுக்கான சிறப்பு சலுகைகள் கிடைக்காததால் அந்த காரின் விலை மிக அதிகம் இருப்பதே இதற்கு காரணம். இந்த நிலையில், இ2ஓ எலக்ட்ரிக் காரை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் சில தினங்கள் அந்த காரை ஓட்டிப் பார்த்து பின்னர் வாங்கிக் கொள்ளும் வாய்ப்பை மஹிந்திரா ரேவா வழங்குகிறது.

Most Read Articles
English summary
Mahindra will start offering a more powerful version of Reva e2o in Europe soon, reports AutocarIndia. The e2o is a pure electric car that was launched by the Reva brand owned by Mahindra & Mahindra. According to the report, engineers from M&M and Reva are working together to develop new powertrains for future electric vehicles coming from the manufacturer.
 
Story first published: Thursday, August 29, 2013, 11:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X