டெரானோவுக்கு செக்... சவாலான விலையில் புதிய எக்ஸ்யூவி அறிமுகம்!

ரூ.10.95 லட்சம் விலையில் குறைந்த விலை கொண்ட புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி 500 இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ரெனோ டஸ்ட்டர், நிசான் டெரானோ உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களுக்கு நேரடி போட்டியை கொடுக்கும் வகையில் விலையை நிர்ணயித்ததோடு நில்லாமல், அதிக வசதிகளையும் கொடுத்து வாடிக்கையாளர்களை தன்பால் ஈர்க்க மஹிந்திரா முற்பட்டுள்ளது.

பாதுகாப்பு அம்சங்களுக்கு குறைவில்லாமல் டபிள்யூ4 என்ற பெயரில் வந்திருக்கும் இந்த புதிய எக்ஸ்யூவி 500வில் இருக்கும் வசதிகள் மற்றும் அம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

முக்கிய அம்சங்கள்

முக்கிய அம்சங்கள்

எல்இடி விளக்குகளுடன் கூடிய புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், டியூவல் டோன் இன்டிரியருடன் வந்துள்ளது. 4 ஸ்பீக்கர்களுடன் கூடிய மியூசிக் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

140 பிஎச்பி ஆற்றலையும், 330 என்எம் டாரக்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்ட 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் இணைந்து செயலாற்றும்.

இதர வசதிகள்

இதர வசதிகள்

ட்வின் எச்வி ஏர்கன்டிஷனர், டில்ட் ஸ்டீயரிங், பவர் அட்ஜெஸ்டபிள் ரியர் வியூ கண்ணாடிகள், ரிமோட் சென்ட்ரல் லாக்கிங், 6 நிலையில் உயரத்தை கூட்டிக் குறைக்கும் வசதி கொண்ட டிரைவர் இருக்கை, முழுவதுமாக மடக்கும் வசதி கொண்ட இரண்டாவது, மூன்றாவது இருக்கைகள் ஆகியவை குறிப்பிட்டு கூறலாம்.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

டியூவல் ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் பிரேக்ஃபோர்ஸ் டிஸ்ட்ரிபியூஷன்(இபிடி) தொழில்நுட்பம், டிஸ்க் பிரேக்குகளுடன் வந்துள்ளது. விபத்துக்களின் போது பயணிகளை காக்கும் வகையிலான side impact beams மற்றும் crash protection with crumple zones பாதுகாப்பு கட்டமைப்பை கொண்டிருக்கிறது.

 மைலேஜ்

மைலேஜ்

மைக்ரோ ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட புதிய எக்ஸ்யூவி 500 வேரியண்ட் லிட்டருக்கு 15.1 கிமீ மைலேஜ் தரும் அராய் சான்று தெரிவிக்கிறது.

 வேரியண்ட்டுகள்

வேரியண்ட்டுகள்

தற்போது விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ள டபிள்யூ- 4 வேரியண்ட்டையும் சேர்த்து மொத்தம் 4 வேரியண்ட்டுகளில் மஹிந்திரா எக்ஸ்யூவி 500 கிடைக்கிறது. டபிள்யூ8 வேரியண்ட் ஆல் வீல் டிரைவ் மற்றும் ப்ரண்ட் வீல் டிரைவ் என இரு வேரியண்ட்டுகளிலும், டபிள்யூ 6 வேரியண்ட் ப்ரண்ட் வீல் டிரைவ் கொண்டதாகவும், டபிள்யூ 4 வேரியண்ட்டும் ப்ரண்ட் வீல் டிரைவ் கொண்டதாகவும் கிடைக்கிறது.

 கடும் போட்டி

கடும் போட்டி

ரெனோ டஸ்ட்டர் மற்றும் நிசான் டெரானோ எஸ்யூவிகளுக்கு மஹிந்திரா எக்ஸ்யூவியின் புதிய பேஸ் வேரியண்ட் நேரடி போட்டியை கொடுக்கும். சக்திவாய்ந்த எஞ்சின், கூடுதல் வசதிகள், கூடுதல் பயணிகள் செல்வதற்கான இடவசதி ஆகியவை எக்ஸ்யூவியை முன்னிறுத்தும் என மஹிந்திரா நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேலும், செடான் மற்றும் காம்பெக்ட் எஸ்யூவி மாடல்களை வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு இந்த புதிய வேரியண்ட் நிச்சயம் கவரும் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.

விற்பனை

விற்பனை

விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இரண்டு ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில், இதுவரை 74,000 எக்ஸ்யூவி 500 எஸ்யூவிகளை விற்பனை செய்துள்ளதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது.

Most Read Articles
English summary
Mahindra has announced the launch of the entry level ‘W4’ model of its popular SUV, theXUV500 at a price of Rs.10.95 lacs (ex-showroom,Delhi). 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X