மஹிந்திரா குவான்ட்டோ விற்பனையில் தொடர்ந்து சரிவு

By Saravana

மஹிந்திரா குவான்ட்டோவின் விற்பனை மாதத்துக்கு மாதம் கடுமையாக சரிந்து வருகிறது. எனவே, இது ப்ளாப் பட்டியலில் இணையும் நிலை உருவாகியிருப்பதாக ஆட்டோமொபைல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டு மஹிந்திரா விற்பனைக்கு கொண்டு வந்த மஹிந்திரா குவான்ட்டோவுக்கு வந்த புதிதில் நல்ல வரவேற்பு இருந்தது. போகப்போக இது அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால், குவான்ட்டோவின் உற்பத்தியை கூட மஹிந்திரா கூட்டியது.

Mahindra Quanto

ஆனால், புத்தாண்டு குவான்ட்டோவுக்கு நல்ல ஆண்டாக இருக்கவில்லை. கடந்த ஜனவரி முதல் குவான்ட்டோவின் விற்பனை தொடர்ந்து சரிவு கண்டு வருகிறது. ஜனவரியில் 2,954 குவான்டடோ கார்களும், பிப்ரவரியில் 2,099 கார்களும், மார்ச்சில் 1,857 கார்களும், ஏப்ரலில் 1,338 கார்களும் மட்டுமே விற்பனையாகியுள்ளது.

இதனால், குவான்ட்டோவுக்கு செய்த முதலீடுகள் மஹிந்திராவுக்கு போதிய பலன் அளிக்காத நிலை ஏற்பட்டிருக்கிறது. அதேவேளை, குவான்ட்டோவின் டெஸ்ட் டிரைவ் செய்த அனுபவத்தை வைத்து அதனை ஒரு சிறந்த காராக கூறலாம். நிறைவான வசதிகள் மட்டுமின்றி, இதன் எஞ்சின் மிக சிறப்பாக இருந்தது.

இதன் எஞ்சின் நகர்ப்புறம், நெடுஞ்சாலைக்கு ஏற்றதாக இருந்ததுடன், இடவசதியும் சிறப்பாகவே உள்ளது. மேலும், குறைந்த விலையில் கிடைக்கும் சிறந்த மினி எஸ்யூவியாக குவான்ட்டோவை கூறலாம்.

Most Read Articles
English summary
The Mahindra Quanto is the another flop story from Mahindra and Mahindra? Recent sales report says YES to this question. Mahindra sold 2954 units in January 2013, 2099 units in February 2013, 1857 units in March 2013 and only 1338 units in April 2013.
Story first published: Thursday, May 9, 2013, 11:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X